சர்கார் தீர்ப்பு வெளியானது…. அதிர்ச்சி தரும் சில உண்மைகள்……….!!!!!

சர்கார் திரைப்படம் பல சிக்கல்களை தாண்டி இன்று ஒரு முடிவுக்கு வந்தது. சர்க்கார் படம் எந்தவித தடங்கலும் இல்லாமல் வரும் தீபாவளிக்கு சரவெடியாக வெடிக்க உள்ளதாம்.

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் சர்க்கார் திரைப்படம் திரைக்கு வரவிருக்கும் சமயத்தில் புதிதாக ஒரு சர்ச்சை கிளம்பியது. அதாவது, இப்படத்தின் கதை என்னுடையது என்று துணை இயக்குனர் வருண் ராஜேந்திரன் சில நாட்களுக்கு முன்பு வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த படத்தின் கதை திருட்டுக்கதை என்றும் அதனால் படத்திருக்கு தடை விதிக்கவேண்டும் என்றுக் கூறி உள்ள நிலையில், அதனை இயக்குனர் பாக்யராஜ் அவர்களும் தனது அறிக்கை மூலம் உறுதி செய்துள்ளர். சர்கார் பட இயக்குனர் முருகதாஸ் ஆரம்பித்தில் இதனை மறுத்து வந்தார்.

இன்று, இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது நீதிமன்றம். ஆம், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு முருகதாஸ் சர்கார் படம் எந்த தடங்கலும் ரிலீஸ் ஆக வேண்டும் என்பதற்காக கதை திருடாமலே, திருடியதற்காக இணை இயக்குனர் வருண் அவர்களுக்கு 30 லட்சம் இழப்பீடு தருவதாக ஒப்புக்கொண்டுள்ளேன். மேலும் படத்தின் முடிவில் நன்றி வருண் என்ற வரிகள் இடம்பெறவேண்டும் அதுமட்டுமல்லாமல் படத்தின் முடிவில் நன்றி கார்டில் இணை இயக்குனர் வருண் ராஜேந்திரன் பற்றி சில தகவல்கள் இடப்பெறவேண்டும் என்ற கருத்தையும் ஏற்றுக்கொண்டுள்ளார் இயக்குனர் முருகதாஸ்.

முருகதாஸ் கதை என்னுடையது என்று கூறி வந்த நிலையில் தற்போது வருணுக்கு இழப்பீடு தர ஒத்துக்கொண்டுள்ளது சற்று குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்பவும், முருகதாஸ் தரப்பில் இந்த கதைக்கரு என்னுடையது தான். நான் யாரிடம் இருந்து திருடவில்லை. இதே கதைக்கருவை இயக்குனர் வருண் அவரும் சிந்தித்து ஏற்கனவே எழுதி அதை தென்னிந்திய திரைப்படக்குழுவில் குடுத்து அதற்கான உரிமை முதலில் பெற்றுள்ளார். இதை இயக்குனர் முருகதாஸ் அவர்களே தற்போது தெரிவித்துள்ளார். கதை திருட்டு இல்லை கூறினாலும் இதை வைத்து பார்க்கும் போது நம்பால் ஏற்காமல் இருக்க முடியவில்லை.

நடிகர் விஜய் படம் என்றாலே வெளிவருத்தற்கு முன்பு எதாவது ஒரு சர்ச்சையை சந்தித்து தான் திரைக்கு வருகிறது என்பதில் சந்தேகம் இல்லை. இப்படி எதாவது, ஒரு பிரச்சனை மூலம் படம் வெளிவந்து நல்ல வசூலை அள்ளுது. இதற்க்கு முன்னாள், நடிகர் விஜயின் மெர்சல் படம்…………..இப்போ சர்கார்….

எந்த வித தடை இல்லாமல் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் சர்கார் திரைப்படத்தை அனைவரும் பார்த்து மகிழ்வோம்……….

You may also like...