விஜய்62 : சர்க்கார் படத்தின் போஸ்டரிற்க்கு தொடர்ந்து வலுத்து வரும் சர்ச்சை!!!

விஜயின் மெர்சல் படத்திற்கு பிறகு அவர் அடுத்து நடித்துகொண்டிருக்கும் விஜய்62 படத்தை ஏ.ஆர், முருகதாஸ் இயக்கிறவருகிறார் படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், இதற்கு முன்பு இந்த படத்திற்கு ஏஆர்.ரகுமான் இசையமைப்பார் என்ற செய்தி வெளிவந்து ரசிகர்கள் கொண்டாடினர். இதையடுத்து, தற்போது படக்குழு இந்த படத்தின் முதல் பார்வை புகைப்படத்தையும் மற்றும் படத்தின் பெயரையும் வெளியிட்டுள்ளது படத்தின் பெயர் சர்க்கார் என்றும் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் பெயர் சர்க்கார் என வைக்கப்பட்டுள்ளதால் கண்டிப்பாக அரசியல் சார்ந்த வசனங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடியவிரைவில் டீஸர் வெளிவரும் அதில் ஒருசில காட்சிகள் வைத்திருப்பார்கள்.

சர்க்கார் படத்திற்க்கு தொடர்ந்து வலுத்துவரும் சர்ச்சை : அவரது முதல் பார்வை புகைப்படம் சர்ச்சைக்குரியதாக அமைந்துள்ளதாக ட்விட்டர் பக்கத்தில்  ரசிகர்களாலும் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களாலும் மிகுந்த கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் அந்த போஸ்டரில் விஜய் புகைபிடித்ததுபோல் காட்சி அமைந்துள்ளது. ஏற்கனவே விஜய் துப்பாக்கி படத்தின் போஸ்டரிலும் இதே போல் சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் விஜய் 2008ல் குருவி படத்தின் வேலைகளின் பொது அப்போது மத்திய மாதிரியாக இருந்த “அன்புமணி ராமதாஸ்” வேண்டுகோளை ஏற்று புகைபிடிக்கும் காட்சிகளில் இனி நடிப்பதை குறைத்துக்கொள்கிறன் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் சில தவிர்க்கமுடியாத காட்சிகளில் சிகரெட் பிடிக்கும் காட்சி விஜய் படத்தில் இடம் பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

மேலும் இந்திய முன்னாள் அமைச்சர் டாக்டர் “அன்புமணி ராமதாஸ்” தன ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்யை நீங்கள் சிகரெட் பிடிப்பதுபோல் இல்லாமல் கூட மிகவும் நல்ல ஸ்டைலிலாக தான் இருக்கிறீர்கள். சிகரெட் உடல்நலத்திற்கு மிகவும் கேடு மற்றும் கேன்சரை வரவழைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அன்புமணியின் ட்விட்டர் பதிவு 

You may also like...