சர்கார் கதை என்னிடம் இருந்து திருடப்பட்டது – உதவி இயக்குனர் புகார்….!!!!!

wait loading cinibook video

 சர்கார் படத்தின் கதை என்னுடையது என்று உதவி இயக்குனர் ஒருவர் தற்போது தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் நடித்து அடுத்து வெளிவரவுள்ள சர்க்கார் படத்தின் பாடல் வெளியீட்டுவிழாவில் விஜய் மிரட்டலாக பேசியுள்ளார். இதுவரை இவர் இந்த அளவு மேடைகளில் பேசி இருந்திருக்க மாட்டார். அந்த அளவுக்கு நீண்ட நேரம் பேசியுள்ளார் அதிலும் அவரது பேச்சுகளில் சிறிது அரசியலும் கலந்த வகையில் இருந்தன. இந்த அரசியல் கலந்த பேச்சு விளம்பர செலவை மிச்ச படுத்தவா இல்லை, அவரது அரசியல் பரவசத்தின் ஒரு உதாரண பேச்சா என அவரது ரசிகர்கள் சிறிது குழப்பத்தில் உள்ளனர். மேலும், பல அரசியல்வாதிகள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் , விஜய்யின் படத்திற்கு ப்ரீ ப்ரோமோஷன் கிடையாது என்று பா.ஜா.கா பிரமுகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சர்கார் கதை என்னிடம் இருந்து திருடப்பட்டது - உதவி இயக்குனர் புகார்....!!!!!

இந்நிலையில்,உதவி இயக்குனர் வருண் என்பவர் சர்கார் படத்தின் கதை என்னுடையது என்று திரைத்துறை எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளாராம் . அதாவது, சர்கார் படத்தின் கதை என்னுடையது என்றும், செங்கோல் என்னும் தலைப்பில் திரைத்துறை எழுத்தாளர்கள் சங்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு பதிவுச் செய்துள்ளேன் என்று வருண் தெரிவித்துள்ளார். இதனால், சற்று குழப்பத்தில் உள்ளனர் விஜய் ரசிகர்கள்.
எது எப்படியோ?? விஜய் படம் என்றாலே எதாவது சர்ச்சை இருக்கணும் போல இல்லனா??? அது விஜய் படமாக இருக்காது என்கின்ற நிலைமை தற்போது நிலவி வருகிறது……

Leave a comment

You may also like...