இயக்குனர் ஷங்கரை நெகிழ செய்த உதவி இயக்குனர்கள்…….!!!!!!

wait loading cinibook video

இயக்குனர் ஷங்கர் அவரின் திரையுலக பயணத்தில் வெற்றிகரமாக 25 வருடம் கடந்து வந்துஉள்ளர். அவருடைய திரையுலக பயணத்தில் நேற்றுடன் அதாவது ஜுலை 30 ஆம் தேதி உடன் தமிழ் சினிமா துறையில் 25 வருடம் வெற்றிகரமாக நிறைவடைகிறது. ஆம், இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் காலடி வாய்த்த வருடம் 1993 ஆம் ஆண்டு. அவருடைய முதல் படம் “ஜென்டில்மேன்” முதல் படத்திலேயே அவருக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்ப்பு கிடைத்தது என்று சொன்னால் அது மிகையாகது.அதை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிகரமான படங்களை நமக்கு வழங்கினார். அதில் இந்தியன், முதல்வன், ஜீன்ஸ், சிவாஜி மற்றும் அந்நியன் போன்ற படங்கள் மக்கள் மனதில் இன்றும் நிலைத்திருக்கும் படங்கள் என்று சொல்லலாம். இந்த படங்கள் மட்டும் அல்ல. நான் குறிப்பிட்டவை சில மட்டும்.தற்போது கூட ரஜினி சார் வைத்து 2.0 படம் இயக்கி வருகிறார். இந்தியன் 2 படம் விரைவில் இயக்க போவதாக தெரிவித்து உள்ளார்.

இவ்வாறு, தன்னுடைய கடின உழைப்பால் இன்று வரை மக்கள் மத்தியில் தனி இடத்தை பெற்று உள்ள இயக்குனர் சங்கர் அவர்களின் 25 ஆம் ஆண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு இயக்குனர் சங்கர் உடன் பணிபுரிந்த உதவி இயக்குனர்கள் அனைவரும் இணைந்து 25 ஆம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடினர். அதில் உதவி இயக்குனர்கள் வசந்த பாலன், பாலாஜி , சக்தி வேல், அட்லீ போன்ற பல உதவி இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

அதும் அல்லாமல் அவர்கள் அனைவரும் இணைந்து இயக்குனர் சங்கர் பற்றி தனியாக எழுதி அதை எல்லாம் ஒன்றாக புக் போட்டு சங்கர் அவர்களுக்கு பரிசு அளித்து அவரை நெகிழ வைத்து உள்ளனர். இயக்கும் சங்கர் தன்னுடைய டீட்டர் பக்கத்தில் அவர்களுடன் இணைத்து எடுத்த புகைப்படத்தை இணைத்து, நீங்கள் (உதவி இயக்குனர்கள்) இல்லாமல் நான் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்க முடியாது என்று மிகவும் கூறி உள்ளார். அவரின் இந்த பெருந்தன்மையை அவரை இந்த அளவுக்கு உயர்த்தி உள்ளது இன்னும் அவர் பல வெற்றி படங்களை மக்களுக்கு வழங்குவர். அவருக்கு எங்கள் சார்பாக மனம் மார்ந்த பாராட்டுகள்…………

You may also like...