
sangaabishegam-importants
வாழ்வில் செல்வவளம் தரும் சங்காபிஷேகம்…!!!
Sangabhishekam which gives wealth in life…!!!
சங்காபிஷேகம் என்பது பொதுவாக சிவாலயங்களில் கார்த்திகை மாதத்தில் நடைபெறும். சங்காபிஷகம் ஏன் கார்த்திகை மாதத்தில் செய்கிறார்கள்?? சங்காபிஷேகம் பார்ப்பதால் வரும் நன்மைகள். சங்காபிஷேகத்தின் முக்கியத்துவம் என்ன?? என்று பார்க்கலாம் வாங்க…
சங்கு என்பது மஹாலக்ஷ்மியின் அம்சமாக கருதப்படுகிறது. மேலும், சங்கு தூம்மை, வெண்மை, மேன்மை,செல்வம் மற்றும் வெற்றி என இவை அனைத்தையும் குறிக்கும் அடையாளமாக கருதப்படுகிறது. சங்கில் நிறைய வகைகள் உள்ளன. அதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுவது வலம்புரி சங்கு. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடையும் போது, வலம்புரி சங்கு தென்பட்டது லக்ஷ்மியின் கையில் என்கிறது புராண கதை. அதனால் தான், வலம்புரி சங்கை விஷ்ணு தன்னுடைய இடக்கையில் வைத்திருப்பார். சங்கிலிருந்து ஓம் என்ற பிரணவ மந்திரம் இயற்கையாகவே வெளிப்பட்டது. மேலும், சங்கின் முன் பகுதி கங்கையை குறிக்கிறது.சங்கின் நடுபகுதி வருணனையும், கடைசிபகுதி பிரஜாபதியும் குறிக்கிறது.
சங்கின் முக்கியத்துவம் அறிந்து தான் நம் முன்னூர்கள், சங்கை வைத்து அபிஷேகம் செய்துள்ளனர். சங்கு மஹாலக்ஷ்மியின் அம்சம் என்பதால், நாம் சங்கை பூஜை அறையில் வைத்திருந்தால் செல்வ வளம் பெருகும் என்கின்றார். யார் வீட்டில் எல்லாம் சங்கு உள்ளதோ, அங்கே லட்சுமி வசம் செய்வாள் என்பது ஒரு ஐதீகம். பொதுவாக, கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரம் எனப்படும் திங்கள் கிழமைகளில் அனைத்தும் சிவ ஆலயங்களிலும், சங்காபிஷேகம் ரொம்ப சிறப்பாக நடைப்பெறும். 108 அல்லது 1008 சங்கை வைத்து பூஜை செய்வர். பூஜைக்கு உள்ள சங்கில் கங்கை நீரை நிரப்பி, வேள்வி அமைத்து பூஜை செய்வர். அவ்வாறு, பூஜை செய்த சங்கில் உள்ள புனித நீரை சிவனுக்கு அபிஷேகம் செய்வர். இந்த அபிஷேகத்தில் பொதுமக்கள் கலந்துக்கொண்டால், அவர்கள் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி எல்லா வளமும் பெறுவார்கள் என்பது ஐதீகம். ஏன், கார்த்திகை மாதத்தில் இந்த சங்காபிஷேகம் நடைபெறுகிறது தெரியுமா??
கார்த்திகை மாதத்தில் பௌரணமியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடும் நாளில், சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி தருவார். அதனால், சிவபெருமானை குளிர்விக்கும் விதமாக, எல்லா வருடமும், கார்த்திகை மாதத்தில் சோமவாரத்தில் சிவபெருமானுக்கு மிக சிறப்பாக சங்காபிஷேகம் நடைப்பெறுகிறது. எனவே, சங்காபிஷகத்தில் கலந்து கொள்வதனால், நம் கஷ்டம் நீங்கி வாழ்வில் வளம் பெருகும் என்பது ஐதீகம்.
சங்கில் பசும்பாலை நிரப்பி சிவனுக்கு பூஜை செய்தால், ஆயிரம் யாகங்கள் செய்த பலன் கிடைக்கும் என்றும், கங்கை நீர் நிரப்பி சிவபெருமானுக்கு பூஜை செய்தால், பிறப்பே இல்லாதா நிலையை அடையலாம் என்றும் ஐதீகம் சொல்கிறது. எனவே, இத்தகைய சிறப்பு மிக்க சங்காபிஷேகத்தில் நாம் அனைவரும் கலந்துக்கொண்டு ஈசன் அருள் பெறுவோம்…