News about Kamal Haasan’s Sabash Naidu movie – shooting undergoing in Los Angeles

‘சபாஷ் நாய்டு’ படபிடிப்பை தொடங்கினர் உலகநாயகன் கமல்ஹாசன்:-

‘சபாஷ் நாய்டு’ படப்பிடிப்பை கமல்ஹாசன் ‘லால் ஏஞ்சல்ஸ்’ நகரில் தொடங்கினர்.இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருக்கிறார். மேலும் முதல் முறையாக ஸ்ருதி ஹாசன் தன் அப்பா உடன் சேர்ந்து நடிக்க இருக்கிறார். அதுவும் கமலுக்கு மகளாவே நடிக்க இருக்கிறார் இதுவே இப்படத்தின் சிறப்பு.
‘தசாவதாரம்’ படத்தில் கமல் ‘பல்ராம் நாய்டு’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து உள்ளது அனைவரும் அறிந்ததே.அக்கதாபாத்திரத்தை மையமாக வைத்து தான் இப்படத்தின் கதை அமைந்து உள்ளது.
டி.கே.ராஜீவ் குமார் இப்படத்தை இயக்க உள்ளார். மேலும் இப்படத்தில் சிறந்த நகைசுவை நடிகர் பிரம்மானந்தமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை லைகா நிறுவனமும், ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

முக்கியமான செய்தி என்னவென்றால் இப்படம் ஒரே நேரத்தில் தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது. இத்தன்னை சிறப்புகளை உடைய இப்படம் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ் ஆகும் போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெரும் என்பது உறுதி…….

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *