Saamy² movie review – Vikram, Keerthy Suresh

2003ல் வெளிவந்து மிகவும் வெற்றிகரமாக ஓடிய படம் சாமி இதில் ஆறுச்சாமி மற்றும் பெருமாள் பிச்சை கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது. அதிலும் த்ரிஷா விக்ரமின் கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. இதன் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஹரி மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இதன் இரண்டாம் பாகத்தை வெளியிட முடிவு செய்து தற்போது படம் வெற்றிகரமாக வெளிவந்துள்ளது.

கதைக்களம்

சாமி முதல் பாகத்தில் வில்லன் பெருமாள் பிச்சையை, ஹீரோ கொள்வது போன்று முடிவு பெரும், அதன் தொடர்ச்சியாக தற்போது வெளிவந்துள்ள சாமி 2 கதை நகர்கிறது. பெருமாள் பிச்சையின் மூன்று மகன்கள் எப்படி வந்தார்கள் அவர்களுக்கும் ராமசாமிக்கும் என்னென்ன பிரச்சனைகள் வருகிறது. இறுதியில் தங்கள் தந்தையை கொன்ற ஆறுச்சாமியை பழி தீர்த்து கொண்டார்களா என்பது தான் படத்தின் கதைக்களம்.

திரைவிமர்சனம்

  • படத்தின் முதல் பகுதி இயக்குனர் ஹரி பாணியில் விறுவிறுப்பாக செல்கிறது அதில் முதன் பகுதியின் இணைப்புகள் மிகவும் நன்றாக அமைத்திருக்கும். ஆனால் படத்தின் இரண்டாம் பாகம் அதன் விறுவிறுபை தடுத்து நிறுத்துகிறது. இயக்குனர் ஹரிக்கென்றே உரிய பாணி இந்த படத்தில் காண்பது மிகவும் கடினமாக இருக்கிறது.
  • விகரம் இந்த படத்திற்காக மிகவும் உழைத்திருப்பது நான்றாக தெரிகிறது ஏனென்றால் 15வருடத்திற்கு முன்பாக 28 வயது தோற்றத்தில் நடித்த சாமி. அதன் பிறகு தற்போது அதே தோற்றத்துடன் களம்  இறங்கி தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பது மிகவும் சிறப்பு.
  • படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சாமி முதல் பகுதியில் அமைந்த பாடல்கள் இன்றளவும் அதிகமாக கேட்க படுகிறது அதேபோல் இந்த படத்தின் பாடல்கள் கைகொடுக்கவில்லை என்றே கூறலாம்.
  • சூரியின் நடிப்பை பற்றி கூறவேண்டும் என்றால் அவருக்கு இந்த படம் ஒரு பாடமாக அமைத்துள்ளது என்றே கூறலாம். அந்தளவு படத்தில் காமெடி எடுபடவில்லை.
  • ஐஸ்வர்யா ராஜேஷ் தனக்கு கொடுக்கபட்ட கதாபாத்திரத்தை செய்துள்ளார் என்று மட்டும் தான் கூற முடியும். அந்தளவுக்கு மற்ற சில நடிகர்களுக்கு முக்கிய காதாபாத்திரங்கள் இல்லை என்றே கூறலாம்.
  • மொத்தத்தில் சாமி முதல் பகுதியை எதிர்பார்த்தி இந்த படத்திற்கு போனால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

மதிப்பெண்

இந்த படத்திற்கு சினிபுக் 5க்கு 2.3 கொடுக்கிறது

Movie cast and crew 

Directed by Hari
Produced by Shibu Thameens
Written by Hari
Starring Vikram
Bobby Simha
Prabhu Ganesan
Aishwarya Rajesh
Keerthy Suresh
Music by Devi Sri Prasad
Cinematography Priyan
Venkatesh Anguraj
Edited by V. T. Vijayan
T. S. Jay
Production
company
Thameens Films
Release date
  • September 21, 2018[1]
Country India
Language Tamil

You may also like...