Ratsasan Movie Review – Vishnu Vishal, Amala Paul

wait loading cinibook video

இயக்குனர் ராம்குமார் முண்டாசுப்பட்டி படத்தின் நாயகன் இவர்தான் என்றே கூறலாம் அந்த அளவுக்கு அவர் அந்த படத்தை காமெடியில் செதுக்கியிருப்பர். அனைவராலும் விரும்பி பார்த்த படம். அதன் பிறகு தற்போது ராட்சசன் என்ற படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். காமெடியில் கலக்கிய ராம்குமார் தற்போது. . சைக்கலாஜிக்கல் திரில்லராக அப்படியே வித்தியாசமான ஒரு பாணியில் எடுத்துள்ளார்.

கதைக்களம்

ராட்சசன், ஒரு உதவி இயக்குனர் தன்னுடைய ஒரு கதையை வைத்துக்கொண்டு அதை படமாக எடுப்பதற்காக, ஒவொரு ப்ரொடெக்ஷன் அலுவலகமாக செழிகிறார். அப்போது ஒருசில காரணங்களால் வேறு வழியில்லாமல் போலீஸ் வேளைக்கு செல்ல நிகழ்கிறது. அதில் அவருக்கென்று ஒரு கேஸ் வருகிறது, அதை அவர் அலசி ஆராய்ந்து இந்த கேஸின் சரியான வழி இதுதான் என்று கடுபிடிக்கிறார் அதிலுள்ள அரசியலுள்நோக்கங்களை கண்டறிகிறார். இறுதியில் அவரது கதை படமாக்கப்பட்டது மற்றும் அவர் வேலைசெத்துவரும் கேஸ் என்ன ஆனது என்பது தான் படத்தின் கரு.

திரைவிமர்சனம்

முதலிலே சொன்னது போல் காமெடியில் கலக்கிய ராம்குமார் தற்போது ஒரு திரில்லர் படத்தை மிகவும் அருமையாக கொடுத்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இந்த படத்தை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு காட்சியும் மிகுந்த த்ரில்லிங்காக இருக்கும் படி அமைத்திருக்கிறார். அதற்காகவே அவருக்கு எங்களது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.

விஷ்ணு விஷால் தனது பங்கை நன்றாக செய்துள்ளார். மேலும் இந்த படத்தில் ராம்குமாருக்கு பிறகு மற்றொரு தூண் என்று சொல்வது என்றால் அது இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிஹிப்ரான். ஒரு த்ரில்லிங் படத்தில் இசைதான் அதிக பங்கு பெரும் அதுபோல் அவரது இசை படத்தை பார்வர்கள் மிரளும் அளவுக்கு இசையமைத்துள்ளார். முனீஷ்காந்த்தை நாம் காமெடி நடிகராக தான் பார்த்திருப்போம் ஆனால் இந்த படத்தில் அவரது வித்யாசமான நடிப்பும் படத்திற்க்கு வழு சேர்த்துள்ளது.

படத்தில் நெகடிவ் என்று சொன்னால் படத்திற்கான நேரம் தான் மிக நீண்ட படமாக இருப்பதால் சிறிது போர் அடிப்பதுபோல் தோன்றும். அதேபோல் விஷ்ணுவிஷால் ஒரு போலீஸ் என்று முதலிலே காட்டியிருக்கலாம் அதை தலையை சுற்றி மூக்கை தொடுவது போல் உள்ளது.

மதிப்பெண்

இந்த படத்திற்கு சினிபுக் 5க்கு 2.7கொடுக்கிறது.

Movie cast and crew

Directed by    Ramkumar
Produced by  G. Dilli Babu, R. Sridhar
Written by Ramkumar
Starring Vishnu Vishal, Amala Paul
Music by Ghibran
Cinematography P. V. Sankar
Edited by San Lokesh
Production company Axess Film Factory
Distributed by Skylark Entertainment
Release date 5 October 2018
Country India
Language Tamil

Leave a comment

You may also like...