ரஜினியின் 166 ஆவது படத்தை இயக்க போகும் பிரபல இயக்குனர் யார் தெரியுமா???

பா .ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது என்று சொல்லலாம். காலா படத்திற்கு பிறகு ரஜினியின் கைவசம் இரண்டு படங்கள் உள்ளன. சங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 படம் நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படத்தில் வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். விஜய் சேதுபதி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஏற்கனேவே மூன்று படங்கள் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதியும் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் உடன் நடிப்பது பெருமையாக உள்ளது என தெரிவித்து உள்ளாராம். இதற்கிடையில் கைவசம் இரண்டு படங்கள் உள்ள நிலையில் ரஜினி அடுத்த படத்திற்கு ரெடியாக உள்ளார்.

ரஜினியின் அடுத்த 166 ஆவது படத்தை பிரபல இயக்குனர் கே.ஸ் ரவிகுமார் இயக்க போகிறாராம். ரஜினியும் கே.ஸ் ரவிக்குமாரும் தனியாக சந்தித்து இந்த படத்தை பற்றி பேசியதாக செய்தி வெளிவந்து உள்ளது. அனால் இன்னும் அதிகாராப்பூர்வமாக செய்தி எதுவும் இதை பற்றி வெளிவரவில்ல. பார்க்கலாம் விரைவில் ரஜினி 166 படம் பற்றிய செய்தி வெளிவரும். கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்து வெற்றி பெற்ற படங்கள் படையப்பா, முத்து மற்றும் லிங்கா . அந்த படங்களை யாரும் மறக்க முடியாது . அந்த படங்களின் வரிசையில் இந்த படம் அமையும் என எதிர்பார்க்கலாம்.

You may also like...