கேரளா மக்களுக்காக ரகுமான் பாடிய பாடல்!!!! நம்மிக்கை தரும் பாடல்………….

கேரளா தற்போது கடல் போல காட்சியளிக்கிறது. அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவி வரும் நிலையில், இசைப்புயல் எ.ஆர்.ரகுமான் அவரும் கேரளா மக்களுக்கு நம்மிக்கை தரும் வகையில் ஒரு பாடல் ஒன்றை பாடி  உள்ளார்.

கேரளாவில் கடந்த 10 நாட்களுக்கு மேல் பெய்த கன மழையால் கேரளா மாநிலம் ஒரு தனி தீவு போல காட்சியளிக்கிறது. கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 300 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். மேலும், அங்கு பலரும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்குள்ள மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். பக்கத்து மாநிலம் உதவி புரிந்து வருகிறது. பல பிரபலங்கள் பண உதவி செய்து வருகின்றனர். தற்போது அங்கு மழை குறைந்து வெள்ள நீர் வடிய தொடங்கி உள்ளது. இருந்தாலும், அங்கு மீண்டும் அவர்கள் இயல்பு நிலைக்கு மாறுவதற்கு இன்னும் பல நாட்கள் ஆகும்.

 

இவ்வாறு, பலரும் உதவி வரும் நிலையில் இசைப்புயல் எ.ஆர். ரகுமான் அவர்கள் சான்பிராஸிஸ்கோ -வில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியில் கேரளா மக்களுக்காக ஒரு பாடலை பாடி அந்த வீடியோவை அவர் தன்னுடைய டிவீட்டர் பக்கத்தில் போட்டு உள்ளாராம். தற்போது அந்த வீடியோவை அனைவரும் பார்த்து நன்றிகள் தெரிவித்து வருகின்றனர். ரகுமான் கேரளா மக்களுக்கு நம்மிக்கை தரும் வகையில்  பாடியதை நீங்களும் கேளுங்கள்.

You may also like...