
pushpa2-first look poster
மிரட்டும் புஷ்பா 2 “First look poster “….இணையத்தில் வைரல்!!!
Intimidate Pushpa 2 “First look poster “….viral on the internet!!!
சுகுமார் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வசூலை பெற்ற படம் புஷ்பா . இப்படம் தெலுங்கு மட்டும் அல்லாமல் தமிழ், ஹிந்தி மற்றும் கன்னடம் என எல்லா மொழிகளிலும் வெளியாகி நல்ல வெற்றி பெற்றது. பான் இந்தியா படமாக வெளியாகி வெற்றி பெற்றது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ரஷ்மிகா நடித்திருந்தார். இப்படத்தின் வசூல் கிட்டத்தட்ட 350 கோடிக்கு மேல் வசூலானதாம்.

தற்போது இப்படத்தின் இரண்டாவது பாகமான “புஷ்பா தி ரைஸ்” படப்பிடிப்பு நடந்து வருகிறது. படத்தின் ஷூட்டிங் முழுவதும் வெளிநாடுகளில் நடக்கிறது. இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. சும்மா மிரட்டலான போஸ் கொடுத்துள்ளார் அல்லு அர்ஜுன். “புஷ்பா தி ரைஸ்” என்ற பெயரில் வெளிவர இருக்கும் இப்படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது எனலாம். இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மலேசியா மற்றும் சிங்கப்பூரில் நடக்க போவதாக தெரிவித்துள்ளனர் படக்குழுவினர் .