
pirandai benifits
பிரண்டையின் மருத்துவ பலன்கள்:-
medicinal benifits of pirandai :-
நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரிய உணவு முறைகள் எல்லாமே நமக்கு ஆரோக்கியத்தை மட்டும் தந்தது. ஆனால் இன்றோ எல்லாமே மாறி விட்டது. பாரம்பரிய உணவு முறையை நாம் மறந்து பல வருடங்கள் ஆகின்றன. உணவே மருந்து என்பதற்கேற்ப இயற்கை நமக்கு பல அறிய வகை மூலிகைகளை தருகிறது .நாம் தான் அதை எல்லாம் கண்டுக்கொள்ளவதே இல்லை. அந்த வகையில் நாம் இன்று பார்க்க போவது பிரண்டையின் மருத்துவ பலன்கள் பற்றி தான்.
- பிரண்டை கொடி போல பற்றி வளரக் கூடியது. பிரண்டையில் இலை அதிகம் இருக்காது. தண்டு பகுதி தான் உள்ளது. பிரண்டை துவையல் செய்து சாப்பிட்டால் வயிற்று புண்,மூலம் குணமாகும். மேலும், கால் வலி, தசை பிடிப்பு,சுளுக்கு மற்றும் எலும்பு முறிவு போன்றவற்றிக்கு பிரண்டை துவையல் செய்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.
- எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுகட்டு போட்டவர்கள் இந்த பிரண்டையின் தண்டு பகுதியை எடுத்து சாறு எடுத்து குடித்தால் விரைவில் எலும்புகள் இணையும்.
- பிரண்டையை நெய் விட்டு வதக்கி அரைத்து கொட்டைப்பாக்கு அளவு எட்டு நாட்கள் தொடர்ந்து காலை,மல்லை என இரண்டு வேலைகளில் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் குணமாகும்.
- ரத்த ஓட்டத்தை சீராக்க கூடியது இந்த பிரண்டை.
- பிரண்டை இதயத்தை பலப்படுத்தும், எலும்புகளுக்கு பலம் தரக்கூடியது. மேலும் , மூளை நரம்புகளை பலப்படுத்தும்.
இவ்வாறு பல அற்புத பலன்கள் கொண்ட பிரண்டையை நாம் அனைவரும் நம் உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ளலாம். பிரண்டையை துவையல் அல்லது பொடி செய்து சாப்பிடலாம். சிறியவர்கள் முதல் பெரியர்வர்கள் வரை அனைவரும் வாரத்தில் இரண்டு இந்த பிரண்டையை துவையலாகவோ அல்லது பொடியாகவோ உணவில் சேர்த்துக் கொண்டால் தொண்டையில் இருந்து ஆசன வாய் வரை அனைத்தும் உறுப்புகளுக்கும் பலத்தை தரக்கூடியது.