
poniyan selvan2 review
பொன்னியின் செல்வன் 2 படம் எப்படி இருக்கு?? ரசிகர்களின் கருத்து என்ன?? வாங்க பார்க்கலாம்….
மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் பாகம் 2 இன்று வெளியானது. வெளியான முதல் நாளிலேயே அனைத்து திரையரங்கிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. பொன்னியின் செல்வன் பாகம் 1 சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்பெற்றது. கல்கியின் எழுத்து வடிவத்திற்கு ஒளி வடிவம் கொடுத்து வரலாற்று படத்தை மக்கள் மத்தியில் வெற்றிகரமாக சேர்த்ததே மிக பெரிய விஷயம். பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு வரலாற்று படத்தை பார்க்கும் ஆர்வம் மக்கள் மத்தியில் தற்போது ஏற்பட்ட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணமே இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் தான். அவரின் இந்த முயற்சிக்கு நாம் ஒரு பெரிய பாராட்டைக் கொடுக்கலாம்.
பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் எப்படி இருக்கு? மக்களின் கருத்து என்ன?? வாங்க பார்ப்போம்…
பொன்னியின் செல்வன் பாகம் 2 ஆரம்பத்தில் கமல்ஹாசன் குரலில் பாகம் 1 யை பற்றிய அறிமுகம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, கடலில் மூழ்கிய அருண்மொழித்தேவர்க்கு என்ன நிகழ்ந்தது? முதல் பாகத்தில் படத்தின் இடையிடையே அருண்மொழித்தேவரை காப்பாற்றும் காட்சியில் வரும் அந்த ஊமை ராணி யார்? என்ற கேள்விக்கு பாகம் 2 இல் விடை தெரியும். கரிக்காலுனுக்கு என்ன நடந்தது?? சோழ ராஜ்ஜியத்தை யார் கைப்பற்றுவார் போன்ற பல கேள்விகளுக்கு இரண்டாவது பாகத்தில் விடை உள்ளது.
படத்தில் நடித்த அனைத்து முன்னணி நடிகர்களும் ரொம்ப அழகாக நடித்துள்ளனர். இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக படக்குழுவினர் அனைவரும் இந்தியா முழுவதும் சென்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரகுமான் இசை படத்திற்கு கூடுதல் பலம் எனலாம். லைகா நிறுவனமும், படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் படத்திற்கு மற்றோரு பலம் என்று சொன்னால் அது மிகையாகாது.
இப்படத்தை பார்த்த மக்கள் கருத்து என்ன?? பலரும் இப்படம் ரொம்ப அருமையாக உள்ளது. பொன்னியின் செல்வன் பாகம் 1 யை விட பாகம்-2 ரொம்ப விறுவிறுப்பாக செல்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
May I simply say what a comfort to uncover someone that actually understands what they are discussing over the internet. You actually know how to bring a problem to light and make it important. More and more people have to read this and understand this side of the story. I was surprised youre not more popular because you certainly possess the gift.