பொள்ளாச்சியில் நடந்த கொடூரம் – நடந்தது என்ன ??

wait loading cinibook video

பொள்ளாச்சியில் நடந்த கொடூர அரக்கர்களின் செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது. கண்டிப்பாக பெரிய பின்புலம் இல்லாமல் இப்படி ஒரு செயலை செய்ய யாரும் சற்று யோசிப்பார்கள் என்ற சந்தேகம் எழுகிறது. நடிகை கஸ்தூரி கூறியதுபோல் 20பேர்களில் ஒருவருக்கு கூடவா இறக்கம் இல்லாமல் போகும். கண்டிப்பாக இருந்திருக்கும். ஆனால் இந்த அதிகாரங்கள் அவர்களின் பக்கம் இருப்பதால் துணிந்து செய்ய தூண்டுகிறது.

பத்து அல்ல இருப்பது அல்ல சுமார் ஐம்பது முதல் நூற்றைம்பது பெண்களின் வாழ்க்கையை கெடுத்துள்ளார். இவர்கள் வலைவீசுவது பெரிதும் சமூகவலைதளங்களில் தனது அடையாளம் தெரியாத ஒரு கணக்கை பெண்களின் பெயர்களில் திறந்து கொண்டு வலைவீச ஆரம்பிக்கின்றனர். சில பெண்கள் சரி பெண்தான் என்று நம்பி இவர்களிடம் பேச்சு கொடுக்கின்றனர் பிறகு நன்றாக பேசி அவர்களிடம் பெண்களுக்கு ஏற்படும் சில ரகசிய விஷயங்களை பற்றி பேசுகின்றனர். அதன்பிறகு படிப்படியாக மேல சென்று அவர்களுக்கு பெண்களுக்கு பெண்களே செய்துகொள்ளும் லெஸ்பியன் போன்ற உறவுகள் பற்றி பேச துவங்குகின்றனர்.

பிறகு அவர்களை சந்திக்க விருப்பம் தெரிவித்து அவர்களை மயக்கி அவர்களிடம் வரவழைத்து. தனது நண்பர்களை வைத்து பாலியல் பலாத்காரம் செய்கின்றனர். அவருடன் பழகியவர் மட்டுமல்லாமல் அனைவரும் அவளை சித்ரவதை செய்து பாலியல் வன்புணர்வு மற்றும் பலாத்காரம் செய்கின்றனர். இதனை வீடியோ வேறு எடுத்து தொடர்ந்து மிரட்டுகின்றனர். இவராக பல பெண்களிடம் தங்கள் கைவசத்தை காட்டியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட ஒரு பெனின் அண்ணன் போலீசில் வழக்கு தொடுக்க அதை விசாரித்த பொது தான். இவர் மட்டும் பாதிக்கப்படவில்லை நிறைய பெண்கள் இவனை நம்பி ஏமாந்து இருப்பது தெரியவருகின்றது. அதுமட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 1000 விடீயோக்கள் வரை இவர்கள் கைவசம் உள்ளது.

இப்பொது இந்த வழக்கு மக்களிடம் அதிகம் பேசப்பட்டு வருகிறது மற்றும் விசாரணையும் தீவிரமாக நடந்துகொண்டிருக்கின்ற. இதனை cbi கு மாற்றவேண்டும் என்று பலரது கோரிக்கையாக இருந்து வருகிறது.

ஆகவே பெண்கள் அனைவரும் முகம் தெரியாத நபர்களிடம் பெரிதும் கவனத்துடன் அணுகவேண்டும். தெரியாத நபர்களிடம் இருந்து வரும் அலைப்புகளை கண்டிப்பாக புறக்கணிக்க வேண்டும்.

Leave a comment