PM Narendra Modi Release date – Vivek Oberoi

wait loading cinibook video

பிம் நரேந்திர மோடி படம் ஆரம்பிப்பதற்க்கு முன்னதாக நடிகர் ப்ரெஷ் ராவல் நரேந்திர மோடி தோற்றத்தில் நடிப்பதாகவும் மேலும் அவரே தயாரிப்பதாகவும் இருந்தது. அதன் பிறகு விவேக் ஓபராய் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ட்ரைலர் வீடியோ

 

குஜராத்தின் அகமதாபாத்தில் 2019 ஜனவரி 27 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. மோடியின் ஆரம்பகால வாழ்க்கை மற்றும் அரசியல் பயணத்தை வெகு சுருக்கமாகக் கொண்ட இந்த படத்தில் சில முக்கிய காட்சிகள் உத்தர்காஷி மாவட்டத்தில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பின் இறுதி காட்சிகள் மும்பையில் நடைபெற்றது. உத்தர்காஷியில் ஒரு காட்சி நடக்கும்போது விவேக் படப்பிடிப்பில் காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவாவில் காங்கிரஸ் கட்சியின் மாணவர்கள் பிரிவான NSUI அமைப்பினர் தேர்தலின் நடத்தை நெறிமுறையை மீறுவதாகக் கூறி இந்த படத்தை திரையிட தடை செய்ய தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதினார். அதை பரிசீலித்த தேர்தல் கமிஷன் தற்போது தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் இந்த படம் தேர்தலுக்கு பிறகு வெளியிடலாம் என்று படக்குழுவினரிடம் தெரிவித்துவிட்டது.

Leave a comment

You may also like...