
pillaiyaarpatti pillayaar kovil -history
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்கோவிலின் வரலாறு:
பிள்ளையார்பட்டி என்னும் கிராமத்தில் கற்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தமிழ்நாட்டில் மதுரை- க்கு அருகே சிவகங்கை மாவட்டத்திலிருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
பிள்ளையார் பட்டி கோவிலின் சிறப்பு அம்சங்கள்:
தமிழ்நாட்டிலே முதல் குடவரைக் கோவில் என்கிற சிறப்புக்குரியது. 1300
வருடங்களுக்கு முன்பே தோன்றியதாக வரலாறு தெரிவிக்கிறது. பிள்ளையார் பட்டி கோவில் ஒரு சிறிய மலையின் அடிவாரத்தில் குடையப்பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது. இக்கோவிலின் பிரதனா தெய்வமாக கற்பக விநாயகர் அருள்பலிக்கிறார். இங்குள்ள பிள்ளையார் சுமார் 6அடி உயரத்தில் ஒரே கல்லால் செதுக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பு. கற்பக விநாயகரின் திருஉருவம் வலப்புறம் திரும்பி உள்ளது. அவரது தும்பிக்கையும் வலப்புறம் சுளித்து உள்ளது. அதனால் தான், பிள்ளையார்பட்டி விநாயகர் “வலம்புரி விநாயகர்” என்றும் அழைக்கப்படுகிறார்.
மேலும் , பல்லவர்களுக்கு முன்பே குடைவரை கோவில் கட்டிய பெருமை பாண்டியர்களை சாரும். இக்கோவிலில் பிள்ளயார்க்கு அடுத்து கார்த்தியாயினி என்கிற அம்மன் சன்னதி உள்ளது. கார்த்தியாயினி அம்மனை வழிபட்டால் விரைவில் திருமண தடை விலகி திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். அதே போல குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள நாகராஜனை வழிபாட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பசுபதீஸ்வரர் சன்னதியில் உள்ள பசுபதீஸ்வரை வழிபாட்டால் அனைத்து செல்வங்களையும் தந்து அருள்புரிவார் என்பது ஐதீகம். இக்கோவிலிருந்து சிறுது தூரத்தில் மருதீஸ்வரர் சந்நதி உள்ளது. சதுர வடிவ கருவறையில் வட்ட வடிவமான ஆவுடையார் மீது லிங்க வடிவில் மருதீஸ்வரர் அருள்பலிக்கிறார்.
கோவில் திருவிழாக்கள்:-
பிள்ளையார்பட்டி கோவிலில் எல்லா மாதத்திலும் திருவிழா தான். அதாவது , ஒவ்வொரு மாதத்திலும் பிள்ளையார் சதுர்த்தி வரும் அல்லவா , அந்த ஒவ்வொரு பிள்ளையார் சதூர்த்திலும் இங்குள்ள கற்பக விநாயகர் மூஷிக வாகனத்தில் கோவிலை வலம் வருவது வழக்கம். முக்கிய விழாவாக இத்தலத்தில் விநாயகர் சதுர்த்தி மிக விமரிசையாக கொண்டாடப்படும். விநாயகர் சதுர்த்திக்கு பத்து நாட்களுக்கு முன்பே கோவிலில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கிடும். அதை தொடர்ந்து காப்பு கட்டுதல், அதை தொடர்ந்து தினமும் விநாயகர் இக்கோவிலை பல்வேறு வாகனங்களில் எட்டாம் நாள் வரை சுற்றி வருவார்.
ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா நடைபெறும். பத்தாம் நாளில் தீர்த்தவாரி நடைபெறும். இதனுடன் திருவிழா முடிவடையும். இதுமட்டும் அல்லாமல் கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீப திருவிழா நடைபெறும். மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை அன்று இங்கு விசேஷம் தான். தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு அன்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும் இங்கு வரும் பத்தர்கள் நேத்திக்கடனாக முக்குறுணி மோதகம் படைப்பார்கள். தொழிலில் முன்னேற்றம் அடைய இக்கோவிலில் வந்து கணபதி ஹோமம் செய்தால் தொழில் முன்னேற்றம் ஏற்படும் என்பது ஐதீகம்.