
pepsi uma latest photo
Current photo of Pepsi Uma going viral in social media!!!
90’s க்கு புடித்த பெப்சி உமாவின் தற்போதைய புகைப்படம்..வேகமாக பரவி வருகிறது…
1990 காலக்கட்டத்தில் இளைஞர்கள் அதிகம் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகள் என்றால் டாப்10 மோவிஸ், நீங்கள் கேட்ட பாடல், திரைவிமர்சனம் மற்றும் பெப்சி உங்கள் சாய்ஸ் என சொல்லிக்கொண்டே போகலாம். அத்தனை நிகழ்ச்சிகள் தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும். அதில் ஒன்று தான் 90 ‘s மனதை கவர்ந்த நிகழ்ச்சி பெப்சி உங்கள் சாய்ஸ் தான். அந்த காலக்கட்டத்தில் பெப்சி உமா என்றாலே அனைவருக்கும் தெரியும். பெப்சி உமாவிற்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே இளைஞர்கள் மத்தியில் இருந்தது. பெப்சி உமா அவர்களும் கிட்டத்தட்ட 15 வருடமாக பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் . 90’s இப்போ பெப்சி உமாவை ரொம்பவே மிஸ் பண்ணுவாங்க.
பெப்சி உமா, டாப் 10 சுரேஷ் என பழைய நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் சிலர் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளனர். புகைப்படத்தை பார்த்தால் ஏதோ திரை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போது எடுத்தது போல இருக்கிறது. நடிகை ரேகா நாயர் அவர்கள் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரான பெப்சி உமாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிறக்கம் செய்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் ரொம்ப வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் பெப்சி உமா அவர்கள் அதே அழகுடன் 1990 இல் பார்த்த மாதிரியே இருக்கிறார் என 90’s இளைஞர்கள் அனைவரும் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.