பரியேறும் பெருமாள் பற்றி தளபதி என்ன சொன்னாரு தெரியுமா???

புதுமுக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா.ரஞ்சித் தயாரிப்பில், தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தான் பரியேறும் பெருமாள். படத்தின் பெயரே புதிதாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் புது இயக்குனர் இயக்கத்தில் வெளியாகும் இப்படம் எப்படி இருக்குமோ ??? என்று நினைத்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் ஆச்சிரியம் தான். படம் பார்த்த மக்கள் அனைவருக்கும் படம் மிக பிடித்து போனது. மக்களை கவரும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. புதுவிதமான கதைக்களம் என்று சொல்லாம். படத்தில் கதிர், ஆனந்தி முக்கியக் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர். இப்படத்தில் வரும் நாய் கூட அழகா நடித்துள்ளதாம்.


படத்தை பார்த்த அனைவரும் பாராட்டி வருகின்றனர். சினிமா துறையைச் சார்ந்த பிரபலங்கள் அனைவரும் புதுமுக இயக்குனர் மாரி அவர்களை பாராட்டிவருகின்றனர்.தளபதி கூட இப்படம் பார்க்க ஆசையாக உள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் இப்பட நாயகன் கதிர் அவர்க்கு தொலைபேசி மூலம் தொடர்புக்கொண்டு எங்கு பார்த்தாலும் உங்க படத்தை பற்றி பேச்சு தான். படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். தன்னுடைய சார்பில் படக்குழுவினருக்கு பாராட்டை தெரிவித்துள்ளார்.

You may also like...