
aarnju fruit-benifits
ஆரஞ்சு பழத்தில் இத்தனை நன்மைகளா? வாங்க பார்க்கலாம். ஆரஞ்சு பழம் இதற்கு ஏன் இப்படி பெயர் வந்தது தெரியுமா? ஆரஞ்சு பழத்தை இரண்டாகப் பிரித்தால் ஒரு பக்கம் 6 சுளையும் மற்றோரு பக்கம் 5 சுளையும் இருக்கும். இதை நாம் கவனித்து உண்டா? இல்லை நாம் கவனித்திருக்க மாட்டோம். ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி உள்ளது. கமலா ஆரஞ்சு என்றும் அழைக்கப்படுகிறது.
ஆரஞ்சு பழத்தின் நன்மைகள்:-
- ஆரஞ்சு பழச்சாறு எடுத்து தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் குடல் புண் , கண் எரிச்சல் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மிகப் பெரிய பிரச்சனையான வெள்ளை படுதல் குணமாகும். உஷ்ணம் குறையும்.
- தூக்கமின்மை காரணாமாக கஷ்டப்படுபவர்கள் ஆரஞ்சு பழச்சாறை எடுத்து அதனுடன் பசும்பால் கலந்து இரவில் குடித்து வர ஆழ்ந்த தூக்கம் வரும்.
- மேலும் , ஆரஞ்சு பழச்சாறுடன் இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் கலந்து தினமும் சாப்பிட்டு வர நுரையீரல் பிரச்சனை சரியாகும். அதுமட்டுமல்லாமல் , ஆரஞ்சு பழச்சாறு தினமும் குடித்து வந்தால் உடல் குளிர்ச்சி அடையும் .மூளை வலிமைப் பெறும்,இதயம் பலம் பெறும், குடல் சுத்தமாகும் .
- ஆரஞ்சு பழச்சாறு குடித்தால் ஆஜீரணக் கோளறு நீங்கும். மேலும் எப்போதும் சோர்வாக இருப்பவர்கள் ஆரஞ்சு பழச்சாறு தினமும் குடித்து வந்தால் உடல் சோர்வு நீங்கி உடல் வலிமைப்பெறும்.
- ஆரஞ்சு பழச்சாறுடன் கருப்பட்டி கலந்துக் குடித்தால் , உடலில் இரும்புச்சத்து கூடும். இத்தனை நன்மைகள் உடைய ஆரஞ்சு பழத்தை நாம் சாப்பிட்டு பயன்பெறுவோம்.
- ஆரோக்கியமான விந்துஅணுக்கள் உருவாக இந்த ஆரஞ்சை சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு விந்து உற்பத்தி அதிகமாகும்.