Nota Tamil movie review – Vijay Devarkonda, Pirzada, Yasika

இயக்குனர் ஆனந்த் சங்கர் நோட்டா படத்தை பற்றிய நேர்காணல் வீடியோ மேல

For Telugu Movie Review Click Here

கதைக்களம்

முழுக்க முழுக்க அரசியலை மையமாக கொண்ட இந்த படத்தின் ஆரம்பத்தில் நாசர் முதலமைச்சராக இருந்துவந்தார் அப்போது அவர் மீது ஊழல் புகார் தொடுக்கப்பட்டு அவர் முதலமைச்சர் பதவி பறிக்கப்படுகிறது. அப்போது சத்தியராஜ் மூலமாக விஜய் தேவர்கொண்டவுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. ஆனால் விஜய் தனக்கு கொடுத்த முதலமைச்சர் பதவியை உதாசீனப்படுத்தும் விதமாக நடந்து கொள்கிறார். பார்க்கு  சென்று குடிப்பதும் கூத்தடிப்பதுமாக அவரது பழக்கவழங்களை மாற்றவில்லை. இதனை கண்டா பத்திரிகை நிருபர் சஞ்சனா அவரை கேள்விகேட்க தொடங்கினர். இதற்க்கு சத்யராஜ் பதிலளிக்கிறார் அவர் என்ன கூறுகிறார் மற்றும் விஜய் நாட்டுக்காக நல்லது செய்தாரா இல்லை என்னவெல்லாம் செய்கிறார் என்பதை தான் படத்தின் முக்கிய கருவாக இருக்கிறது.

இந்த படத்தின் கதையை கேட்கும் போது எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருந்திருக்கும் போல உங்களுக்கு தோணும்…

திரைவிமர்சனம்

விஜய் தேவர்கொணடாவின் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் அவரது அர்ஜுன் ரெண்ட்டி படம் மிகவும் பிரபலமாக ஓடியது. அவரது நடிப்பு இந்த படத்தில் உண்மையில் மிகவும் சிறப்பாக உள்ளது தெலுங்கு நடிகர்கள் தமிழ் படங்களில் நடிக்கும் பொழுது திரையில் ஒரு வித்தியாசமாக தெரியும். உதடு அசைவுகள் படத்தில் இணையாதபடியே அதிகமாக அமைத்திருக்கும். ஆனால் இந்த படத்தில் அவ்வாறு ஒரு இடத்தில கூட இல்லை அவ்வளவு துல்லியமாக எடிட்டிங் செய்திருக்கின்றனர்.

சத்யராஜ் மற்றும் நாசர் இந்த படத்தின் தூண்கள் என்றே சொல்லலாம் அந்த அளவுக்கு தங்களது பங்கினை இந்த படத்துக்காக அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். சாம் சிஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் அவரது இசை இந்த படத்திற்கு மேலும் வழு சேர்த்துள்ளது. படத்தின் பின்னணி இசைகள் எல்லாம் மிகவும் அருமையாக அமைத்துள்ளார், ஆனால் பாடல்களில் அதிக கவனம் செலுத்தவில்லை போல பாடல்கள் சுமாராகத்தான் அமைத்துள்ளது.

சஞ்சனாவின் சீண்டல்கள் படத்தின் காரசாரங்களை அதிகப்படுத்துகிறது. யாசிக்காவின் நடிப்பு தேவையான அளவு உள்ளது. மொத்தத்தில் காரசாரமான அரசியல் வசனங்களும் காட்சிகளும் கொண்ட திரைப்படம்.

மதிப்பெண்

இந்த படத்துக்கு சினிபுக் 5க்கு 2.9 கொடுக்கிறது

Movie cast and crew

Directed by Anand Shankar
Produced by K. E. Gnanavel Raja
Written by Shan Karuppusamy
Starring Vijay Devarakonda
Mehreen Pirzada
Yashika Aannand
Nassar
Music by Sam C. S.
Cinematography Santhana Krishnan Ravichandran
Edited by Raymond Derrick Crasta
Production
company
Studio Green
Distributed by Freeze Frame Films (Telugu & Tamil USA Territory)
Release date
  • 5 October 2018[1]
Running time
153 minutes
Country India
Language Tamil
Telugu

You may also like...

Translate »