நாடோடிகள் 2 பட டீஸர் -வெளியிட்ட சூர்யா…..

 

 

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளியான படம் நாடோடிகள். அந்த படம் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது அந்த படத்தின் இரண்டாவது பாகத்தை சமுத்திரக்கனி தான் இயக்கி வருகிறாராம். தற்போது இயக்கி வரும் நாடோடிகள் 2 படத்திலும் சசி தான் ஹீரோ அவருக்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் அதுல்யா ரவி என இரண்டு நடிகைகள் நடித்து உள்ளனர். மேலும் பரணி, நமோ நாராணயனன் ஆகியோர் நடித்து உள்ளனர்.

 

 

இந்த படத்திற்கு இசை ஜஸ்டீன் பிரபாகரன்,ஒளிப்பதிவு என்.கே கோபுரம். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டீஸர் வெளிவந்து உள்ளது. டீஸர் வெளிவந்து மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்லலாம்………….

 

 

You may also like...