நடிகையர் திலகம் திரைவிமர்சனம், கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா

wait loading cinibook video

மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரி யை யாரும் மறந்திருக்க இயலாது…. மேலும், நடிப்பால் மக்கள் மனதில் நீங்க இடம் பெற்றுள்ள “நடிகையர் திலகம்” சாவித்திரியின் வரலாற்றை படமாக உருவாக்கி உள்ளனர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் உருவாகியுள்ளது. தெலுங்கில் “மகாநதி” என்ற பெயரில் இன்று வெளிவந்துஉள்ளது. இப்படத்தில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார். துல்கர் சல்மான், சமந்தா என பலரும் நடித்துள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

நடிகையர் திலகம் திரைவிமர்சனம், கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா

கீர்த்தி சுரேஷுக்கு திருப்பு முனையாக அமைந்த படம் -நடிகையர் திலகம்

படம் வெளிவருதற்க்கு முன் சாவித்திரி கதாபாத்திரத்திற்கு கீர்த்தியா?????? என சிலர் கிண்டல் செய்தார்கள். ஆனால் தெலுங்கில் இன்று வெளியான படத்தை பார்த்து பலரும் கீர்த்தி சுரேஷுக்கு பாராட்டு தெரிவித்துஉள்ளனர். கீர்த்தி சுரேஷ் “நடிகையர் திலகம்” சாவித்திரி  கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்து உள்ளார் என அனைவரும் கூறிஉள்ளனர்.

 

 

கதைக்களம்

மறைந்த நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறையும் அவர் வாழ்க்கையில் நடந்த வெற்றி தோல்விகளை பற்றியும் இறுதியில் அவர் எப்படி பெரிய ஸ்டார் நடிகை ஆகிறார் என்பது தான் படத்தின் உள்கரு,  Biopic படம்னா அப்படி தான இருக்கும்.  கீர்த்தி சுரேஷ் நடிகை சாவித்திரியாக பிரதிபலித்திருக்கிறார். படத்தின் முதல் பகுதியில் சாவித்திரி எவ்வாறு சிறுவயதிலிருந்தே படத்தில் நடிக்க முயற்சி செய்திருக்கிறார் என்று படமாக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் காதல் மன்னன் ஜெமினி கணேசன் உடன் படவாய்ப்புகள் எப்படி கிடைத்தது என்ற விஷயங்கள் இந்த படத்துடன் இணைகிறது ஜெமினிகணேசன் தோற்றத்தில் நடிகர் துல்கர்சல்மான் நடித்திருக்கிறார்.

சமந்தா ஒரு பத்திரிக்கையாளராக வருகிறார், அவருக்கு பத்திரிகை துறையில் பிரபலம் ஆகவேண்டும் என்ற ஆசை இருக்கிறது நடிகை சாவித்திரியின் கதையை அவர் கட்டுரையாக எழுதுகிறார் இதற்கிடையில் அவருக்கும் விஜய் தேவர்கொண்ட இவர்கள் இருவருக்கும் காதல் மலர்கிறது இவர்கள் இருவரது கதை ஒருபுறம் செல்கிறது. இறுதியில் நடிகை சாவித்திரியின் மறைவு வரை நடந்த விஷயங்கள் படமாக்க பட்டிருக்கிறது. மேலும் Jr NTR, நாகா சைதன்யா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் சிறு வேடங்களில் நடித்துள்ளனர்.
திரைவிமர்சனம்

படத்தின் ஒளிப்பதிவு பற்றி சொல்லியேயாகவேண்டும் அந்த காலகட்டங்களில் இருக்கும் படங்களின் தரம் எப்படி இருந்ததோ அதை அப்படியே கொண்டுவந்திருக்கிறார். படத்தில் உபயோகப்படுத்தப்பட்ட கார்கள் உடைகள் செட்கள் என அனைத்தும் அப்படியே தத்ரூபமாக காட்சியாக்கப்பட்டிருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் சாவித்திரியாகவே வாழ்ந்திருக்கிறார் என்பது தான் உண்மை, படத்தை பார்த்த அனைவரும் கீர்த்தியின் நடிப்பு திறமையை பாராட்டியவண்ணம் உள்ளனர். இவரது நடிப்பு தமிழ் சினிமாவில் ஒரு சகாப்தம் படைக்கும் என்பது நிச்சயம் என்ற அளவுக்கு தன் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஒரு ஸ்டார் சாவித்திரியின் வாழ்க்கைவரலாறை படமாக எடுத்த நாக் அஸ்வின்க்கு ஒரு பெரிய நன்றியை சொல்லியே ஆகவேண்டும். தெலுங்கில்லிருந்து படத்தை தமிழில் அவ்வளவு அழகாக கொடுத்துள்ளார். படத்தில் ஒருசில தெலுகு வசனங்களும் இடம் பெற்றுள்ளன அவைகளை அப்படியே தனித்துவம் மாறாமல் கொடுத்துள்ளார்.

படத்தில் குறை என்று பெரிய அளவிற்கு ஒன்றும் இல்லை மற்றபடி அணைத்து Biopicபோலவே இந்தப்படத்திலும் திரைக்கதை கொஞ்சம் மெதுவாகத்தான் செல்லும் அது ஒன்று தான்.

நடிகையர் திலகம் மதிப்பெண்

இந்த படத்திற்கு சினிபூக் 5க்கு 2.9 கொடுக்கிறது.

Movie cast & crew

Directed by Nag Aswin
Produced by C. Ashwini Dutt
Swapna Dutt
Priyanka Dutt
Written by Sai Madhav Burra
(Telugu dialogues)
Madhan Karky
(Tamil dialogues)
Screenplay by Siddhaarth Sivasamy
Based on Life of Savitri
Starring Keerthy Suresh
Dulquer Salmaan
Samantha Akkineni
Vijay Devarakonda
Rajendra Prasad
Bhanupriya
Music by Mickey J. Meyer
Cinematography Dani Sanchez-Lopez
Edited by Kotagiri Venkateswara Rao
Production
company
Vyjayanthi Movies
Swapna Cinema
Release date
  • 11 May 2018

(Tamil)

Running time
177 minutes
Country India
Language Telugu(Released 9th May)
Tamil

Leave a comment

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *