மதுரையில் நாடோடிகள் 2 படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது

2009ல் வெளிவந்து வெற்றிபெற்ற நாடோடிகள் முதல் பாகதின் பிரதிபலிப்பாக தற்போது சமுத்திரக்கனி இதன் இரண்டாம்பாகத்தை இயங்கிக்கொண்டு வருகிறார் இதன் படப்பிடிப்பு இந்தவருடம் ஜனவரி மாதத்திலிருந்து துவங்கி ஆங்காங்கே படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்பொழுது மதுரை ஆரப்பாளையம் மற்றும் வல்லாளப்பட்டி(அழகர்கோவில் செல்லும் வழியில்) போன்ற மதுரையை சுற்றி படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது.

சமுத்திரக்கனி இதற்கான பணியில் முழுமையாக இறங்கியுள்ளார். நாடோடிகள் முதல் பக்கத்தில் அனன்யா, அபிநயா நடித்திருந்தார்கள் அனால் தற்பொழுது அஞ்சலி சசிகுமாருக்கு ஜோடியாகவும் ஏமாளி படத்தில் கவர்ச்சியாக நடித்த அதுல்யவும் நடித்து வருகிறார்கள்.மேலும் பிக்பாஸ் பரணி, நமோ நாராயணன் இந்த டீமுடன் இணைத்து நடித்து வருகிறார். மேலும் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

படப்பிடிப்பு தளத்தில் மதுரை மக்கள் அனைவரும் சமுத்திரக்கனி, சசிகுமார், அஞ்சலியை காண அலைகடல் என திறந்துகொண்டிருக்கின்றனர் மேலும் அவர்களுடன் புகைப்படம் எடுக்க ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். படத்தை காண அனைத்து மதுரை மக்களும் மிகவும் ஆர்வமாகவுள்ளனர்.
படத்தின் வேலைகள் முடிந்து படம் வெளிவர இன்னும் எப்படியும் 2 மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பகுதி போன்றே இந்த படமும் மாபெரும் வெற்றி பெற சமுத்திரக்கனி மதுரை மக்களுடன் சினிபூக் டீம்மும் இணைந்து எங்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

You may also like...