முருகதாஸ் பேச்சால் அஜித் ரசிகர்கள் கோவம்-நடந்தது என்ன?????

முருகதாஸ் இயக்கத்தில் தற்போது சர்கார் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து தான் வருகிறது. முருகதாஸ் இயக்கிய படங்களில் விஜய் நடிக்கும் மூன்றாவது படம். இயக்குனர்கள் பொதுவாகவே எதாவது ஒரு ஹீரோ வச்சு படம் எடுத்து அந்த படம் நல்ல வெற்றி பெற்றது என்றால், அடுத்து அடுத்து சென்டிமெண்டா அந்த ஹீரோ வச்சு படம் எடுப்பாங்க. அந்த வரிசையில் விஜய்-முருகதாஸ் கூட்டணி அமைத்துள்ளது எனலாம்.

இதே போல அஜித் -சிவா கூட்டணி சொல்லலாம். அது அவரவர்களுடைய விருப்பம். தற்போது ஏ.ஆர் .முருகதாஸ் வீடியோ ஒன்றில் பேசிய விஷயம் அஜித் ரசிகர்களுக்கு பெரும் கோவத்தை ஏற்படுத்தியது. அப்படி என்ன தான் முருதாஸ் சொன்னாரு??? அதாவது முருகதாஸ் நேற்று பிறந்த நாள் கொண்டாடி உள்ளார். அப்போது சன் பிச்சர்ஸ் சார்பில் ஒரு வீடியோ ஒன்று ஏற்பாடு செய்துள்ளனர் , அதில் அவர் விஜய் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு அதோடு நிறுத்தாமல், நடிகர் அஜித்தை தவிர அனைத்து நடிகர்கள் படமும் வந்து செல்கின்றது என்று தெரிவித்துள்ளார். இதனால், அஜித் ரசிகர்கள் கடும் கோவத்தில் உள்ளனர்.

அதாவது, முருகதாஸ் முதன் முதலில் தமிழ் திரையுலகில் ஒரு நல்ல இயக்குனராக கால் பதித்ததற்கு அஜித் நடிப்பில் வெளிவந்த தீனா படம் தான். தீனா படத்தின் முருகதாஸ் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.அதன் பிறகு அவர் அஜித்துடன் எந்த ஒரு படமும் பண்ணவில்லை. இப்படி இருக்கையில் அவர் தற்போது பேசியது அஜித் ரசிகர்களை கோவம் அடைய வைத்தது எனலாம்.

You may also like...