மெர்சல் படத்தின் புதிய சாதனை !!!!!

wait loading cinibook video

கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி மாபெரும் சாதனை படைத்த படம் தான் மெர்சல். இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட். மேலும் இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பல சர்ச்சைக்கு உட்பட்டு பிறகு படத்தின் ட்ரைலர்,டீஸர் வெளியிட்டதும், சிறுது நேரத்தில் அதிக அளவு பார்க்கபட்டது. அது மட்டும் அல்லாமல் படம் வெளிவந்து 200 கோடிக்கு மேல் வசூல் ஆனது. இப்படி வரிசையா பல சாதனை புரிந்த இப்படம் தற்போது புரிந்து உள்ள புதிய சாதனை என்னவென்றால், இப்படம் சம்மந்தமாக எந்த ஒரு செய்தி வெளிவந்தாலும் அது டுவிட்டரில் அதிக அளவு பார்க்கப்பட்டது. அது மட்டும் அல்லாமல் டுவிட்டரில் மெர்சல் படத்திற்கு ஏமோஜி வெளியிடப்பட்டது.


இதை தவிர டுவிட்டரில் அதிகமக பார்க்கப்பட்டது #ஹேஷ்டேக்காக #மெர்சல் தான் என்று டுவிட்டர் அதிகாரப்பூர்வமாக ஆய்வு செய்து வெளியிட்து உள்ளது. இதுவே மெர்சல் படத்தின் புதிய சாதனை. இதுவரை தமிழ் படங்களில் எந்த ஒரு படமும் புரிந்திராத ஒரு புதிய சாதனையை பெற்ற படம் மெர்சல். மெர்சல் பட குழுவினருக்கு சினிபுக் சார்பாக பாராட்டுகள்…….

You may also like...