
merry chirstmas movie- vijay sethupathy-movie update
ஜவான் படத்திற்கு பிறகு “மெர்ரி கிறிஸ்துமஸ்” ஹிந்தி படத்தில் விஜய் சேதுபதி- ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!
Vijay Sethupathi Hindi Movie “Merry Christmas” After Jaawan – Release Date Announced..!!
விஜய் சேதுபதி ஜவான் என்னும் ஹிந்தி படத்தில் ஷாரூக்கானுடன் இணைந்து நடித்தார். தற்போது, அடுத்த ஹிந்தி படமான மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் விஜய் சேதுபதி , காத்ரீனா கைஃப்-வுடன் இணைந்து நடித்துள்ளார். மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன்.
தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீராம் ராகவன் ஹிந்தியில் பல படங்களை இயக்கி வருகிறார். மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் விஜய் சேதுபதி தமிழில் தான் பேசி நடித்துள்ளாராம். தமிழ் பேசும் போது அதை ஹிந்தியில் மொழிபெயர்த்து காத்ரீனா கைஃப்க்கு சொல்லுவதற்கு தீபா வெங்கட் நடித்துள்ளாராம்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளதாம். மெர்ரி கிறிஸ்துமஸ் படம் டிசம்பர் 15 -இல் ரிலீஸ் பண்ண போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.