
seemai aagathi medicinal benifits
சீமை அகத்தியின் மருத்துவ குணங்கள்:-
Medicinal properties of seemai agathi:-
சீமை அகத்தி மூலிகை செடியை புதர்களில் அல்லது ஆற்று கரையோரங்களில் நாம் அனைவரும் பார்த்திருப்போம். அடுக்கு அடுக்கா மஞ்சள் நிற பூக்களுடன் சீமை அகத்தியை நாம் பார்த்திருப்போம். ஆனால், பலருக்கும் அதன் பெயரோ அல்லது மருத்துவ பலன்களோ தெரியாமல் இருக்கும். இப்போது வாங்க நாம் தெரிந்துக்கொள்ளலாம்.
இம்மூலிகைக்கு வண்டு பொண்டி, மலை தகரை என்ற வேறு பெயர்களும் உள்ளது. இது ஒரு புத்தர் செடி இனமாகும். இந்த செடியானது 5 முதல் 12 அடி வரை வளரும் தன்மை கொண்டது. மேலும், அடுக்கு அடுக்காக பூக்கள் பூக்கும் தன்மை கொண்டது.
- இம்மூலிகையின் இலையை அரைத்து உடல் முழுவதும் பூச படை, சொறி, சிரங்கு மற்றும் படர்தாமரை போன்ற நோய்கள் குணமாகும்.
- மேலும், தோல் சம்பத்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும், சீமை அகத்தி ஒரு சிறந்த மூலிகை.
- தேமல் நோயை குணப்படுத்தும் சீமை அகத்தி
- இரத்தத்தில் உள்ள கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இரத்த சோகையை சரி செய்யக்கூடியது.
- சீமை அகத்தி பூக்களை பறித்து நிழலில் காயவைத்து பொடி செய்து அதை கஷாயம் செய்து காலை, மாலை என இரண்டு வேளைகளில் குடித்து வந்தால், சிறு நீரக கோளாறு சரியாகும். சிறுநீரக அடைப்பு நீங்கி சிறுநீர் நன்கு வெளியேறும்.
- வண்டு கடி, பூச்சி கடி என எந்த விஷ கடியாக இருந்தாலும் இம்மூலிகையின் இலையை அரைத்து உடலில் பூச்சி கடித்த இடத்தில பூசினால் சரியாகி விடும்,
- இம்மூலிகையில் கந்தக சத்து அதிகம் உள்ளது.