
omavalli leaf benifits
கற்பூரவள்ளியின் மருத்துவ குணங்கள்

கற்பூர வள்ளி அல்லது ஓமவல்லி என்று அழைக்கப்படும் இந்த மூலிகையின் மருத்துவ குணம் தெரியாமல் பலரும் உள்ளனர். பலர் வீட்டில் இந்த செடியை நம்மால் பார்க்க முடியும்.
- பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் சளி இருமலுக்கு கற்பூர வள்ளி இலையை பயன்படுத்தலாம்.
- தொண்டையில் சதை வளர்ச்சி ஏற்பட்டு அவதிப்படுகிறவர்கள் தினமும் 2 வேளை கற்பூரவள்ளி இலை 2 ,3 எடுத்து நன்குமென்று சாறு தொண்டையில் படும்படி செய்து விழுங்கி வர சதை கரையும்.
- சிறு குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற கக்குவான் நோய் தீர கற்பூரவள்ளி, துளசி, ஆடாதோடை இவை அனைத்தும் பிழிந்து சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து 10 மில்லி அளவு எடுத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் கக்குவான் இருமல் குணமாகும் .
- கற்பூரவள்ளி, துளசி இரண்டையும் சாறு பிழிந்து 5 சொட்டுகள் வீதம் கைக்குழந்தைகளுக்கு குளிப்பதற்கு முன்பு கொடுத்து வந்தால், சளி, இருமல் அண்டாது.
- பெரியவர்களும் இருமல் மற்றும் சளி தொல்லைக்கு கற்பூரவள்ளி இலையின் சாறை பிழிந்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் நிறைவில் குணமாகும்.
- சிறுநீரக கற்கள் கரைய கற்பூரவள்ளி இலைச்சாறு ஒரு ஸ்பூன் அளவு உட்கொள்ள சரியாகும்.
- கற்பூரவள்ளி இலையை சிறு துண்டுகளாக நறுக்கி நீர் விட்டு காய்ச்சி கஷாயமாக்கி, அதனுடன் தேன் கலந்துக் குடித்து வர படபடப்பு, மூச்சுத்திணறல் இதயநோய் மற்றும் மேல்மூச்சு வாங்குதல் ஆகியவை விரைவில் குணமாகும்.
- கற்பூரவள்ளி இலைச்சாறுடன் சிறுது சர்க்கரை சேர்த்து குழந்தைக்களுக்கு கொடுக்க கபத்தினால் வரும் இருமல் குறையும்.
- கற்பூரவள்ளி இலையுடன் திருநீற்றுப்பச்சிலை இலையை சேர்த்து கருந்தேமல் உள்ள இடத்தில பூசி வர தேமல் குணமாகும்.
- சைனஸ் எனப்படும் மூக்கடைப்பு குணமாக கற்பூரவள்ளி ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஒன்றுஇரண்டாக தட்டி அந்த விழுதை சமஅளவு நல்லெண்ணெய் உடன் சேர்த்து காய்ச்சி சாறு வற்றியதும் இறக்கி விடவும். அதை தலையில் தேய்த்துக் குளித்து வர சைனஸ் எனப்படும் மூக்குஅடைப்பு குணமாகும்.
- கற்பூரவள்ளி இலையுடன் வேப்பம் ஈர்க்கு சேர்த்து நன்கு அரைத்து சுண்டக்காய் அளவு எடுத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறிவிடும்.