மாரி 2 படம் எப்படி இருக்கு ????

wait loading cinibook video

   பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் மாரி படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப்பை பெற்றதை அடுத்து, இயக்குனர் பாலாஜி அந்த படத்தின் இரண்டாவது பாகத்தை மாரி 2 படத்தை அதே தனுஷ் மற்றும் ரோபோசங்கர் வைத்து இயக்கியுள்ளார். மாரி 2 வில் சாய்பல்லவி, அறந்தாங்கி நிஷா, மலையாள நடிகர் டோவினோ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளனர். மாரி இரண்டாம் பாகம் முதல் பாகத்தை போல மக்களின் மனதை கவர்ந்ததா இல்லையா என்று பார்ப்போம் வாங்க……..

கதைக்கரு :-

மாரி முதல் பாகத்தை தொடர்ந்து இந்த படத்திலும் கதை தொடர்கிறது. படத்தில் தனுஷ் ஏரியா ரவுடியாக வருகிறார். அவருடன் நெருங்கிய நண்பராக கழுகு கிருஷ்ணா நடித்துள்ளனர். மாரியை கொலை செய்ய நிறைய முயற்சிகள் நடக்கின்றன.100 முறையும் தப்பித்துக் கொண்ட மாரி எப்பவும் போல ரகளை பண்ணி வருகிறார்.

மாரி 2  படம் எப்படி இருக்கு ????

அவர் எப்பவும் பிஸியாக இருப்பதாகக் காட்டி கொள்கிறார். தனுஷ் வாங்கிக்கொடுத்த ஆட்டோவை ஒட்டிக்கொண்டு அந்த ஏரியாவில் வளம் வரும் அராத் ஆனந்தி தனுஷை சுற்றி சுற்றி காதலிக்கிறார். ஆனால் தனுஷ் காதலை ஏற்க மறுக்கிறார். படத்தில் திடீருனு திருப்புமுனையாக டொவினோ தாமஸ் சூழ்ச்சி செய்து மாரி அவரது நண்பரான கிருஷ்ணாவையும் பிரித்துவிடுகிறார். அதன் பின், அவர் மாரியை கொலை செய்ய முயற்சிக்கிறார். இதற்கிடையே வில்லனிடம் மாட்டிக்கொள்ளும் ஆனந்தி (சாய்பல்லவி) . அவரை தனுஷ் மீட்டு வேறு இடம் செல்கின்றனர். இறுதியில் அவர்கள் பழைய இடத்துக்கு வந்து மாரி எதிரியை பழி வாங்கினாரா??? என்பது மீதிக்கத்தை.

திரைவிமர்சனம் :-

படத்தில் தனுஷ் முதல் பாகத்தை போலவே ரொம்ப சிறப்பாக நடித்துள்ளார். அவருக்கு சமமாக சாய்பல்லவி நடிப்பில் சும்மா விளாசியுள்ளார். சாய் தனுஷை துரத்தி துரத்தி காதலிப்பதிலும் சரி காதலை வெளிப்படுத்தும் விதம் என அனைத்திலும் அருமை அழகு….. மேலும், அவர் தனுஷை ரவுடி பேபி எனச் சொல்லி கூப்பிடும் பொது செம cute. டான்ஸ் தனுஷை மிஞ்சும் அளவுக்கு கலக்கியுள்ளார் சாய்.

மாரி 2  படம் எப்படி இருக்கு ????

மேலும், சிறிது நேரம் மட்டும் கலெக்டராக வரும் வரலக்ஷ்மி  சிறப்பாக நடித்துள்ளார். படத்தில் காமெடி குறைவு. யுவன் இசையில் பாடல்கள் செம. மாரி முதல் பாகத்தில் அனிருத்தின் BGM அளவுக்கு யுவன் இசை அமையவில்லை இரண்டாம் பாகத்தில். வில்லன் டோல்வினோ தாமஸ் அதிக லெங்த்தான(length) வசனங்கள் பேசி கொண்டே இருக்கிறார். அவரின் நடிப்பு சுமார். கிளைமாக்ஸ் காட்சியில் தனுஷ் பேசும் வசனங்கள் செம மாஸ். அவர் எதிரியிடம் உன்னை பார்க்கும் பொது கூட பயம் வரல. ஆனால், நீ பேசும் நீளமான வசனங்கள் தான் என்னை பயமுறுத்துகிறது என அவர் சொல்லும் போது மாஸ்.

   படத்தில் தனுஷ் நடிப்பு அவரை மிஞ்சும் அளவுக்கு சாய்பல்லவி நடிப்பு இருந்தது. படம் நாம் அனைவரும் யூகிக்கும் விதத்திலேயே இருந்தது. இயக்குனர் பாலாஜி மோகன் கதையை முதல் பாகத்திருந்து மாற்றி யூகித்திருக்கலாம் . படத்தில் சில இடத்தில லாஜிக் இல்லாத விஷயங்கள் கொஞ்சம் சலிப்பு.

மொத்தில் படம் அனைவரும் ரசிக்கும் விதத்தில் தனுஷ் மற்றும் சாய் நடிப்பில் படம் சூப்பர்….

மாரி படத்திற்கு சினிபூக்கின் மதிப்பு:- 2.5

Leave a comment