
laal salam movie new update
லால் சலாம் படத்தின் புதிய அப்டேட்….!!!
Lal Salam Movie New Update…!!!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகிவரும் படம் “லால் சலாம்”. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் திரைப்படம். இப்படத்தின் ஹீரோவாக நடிகர் விஷ்ணுவிஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜீவிதா, தம்பி ராமைய்யா மற்றும் செந்தில் என பலரும் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலை பகுதியை சுற்றி எடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது முடிய உள்ளது.
அடுத்த கட்ட படப்பிடிப்பு எங்கே என்பது தெரியாமல் இருந்த நிலையில் படத்தின் அடுத்த படப்பிடிப்பு மும்பையில் நடக்க உள்ளதாக அப்படத்தின் நடிகர் விஷ்ணு விஷால் அவர் தனது இன்ஸ்டாகிராம்- பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Laal Salam – லால் சலாம் படத்தின் புதிய அப்டேட்