Kuppathu Raja review – GV Prakash, Poonam Bajwa

wait loading cinibook video

பாபா பாஸ்கர் இயக்கத்தில், ஜீவி.பிரகாஷ், பூணம் பாஜ்வா, யோகி பாபு நடிப்பில் வெளிவந்துள்ள படம் குப்பத்து ராஜா. ஜீவி.பிரகாஷ் நடிப்பில் தற்சமயம் வெளிவந்த சர்வம் தாளமயம் படம் அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் சென்றடையவில்லை. இதற்கிடையில் தற்போது இந்த குப்பத்து ராஜா எப்படி இருக்கின்றது என்பதை பார்க்கலாம்.

கதைச்சுருக்கம்

படம் முழுக்க சென்னையின் சேரி பகுதியை மைய்யமாக கொண்டு எடுக்கபட்ட படம். அந்த சேரி வாழ் மக்களில் ஒருவன் தான் ஜீவி.பிரகாஷ். இந்த படத்தில் பார்த்திபன் தீவிர MGR ரசிகனாக நடிக்கிறார். அதற்காகவே அவர் தனது பெயரை எம்.ஜி.ராஜேந்திரன் என்று வைத்திருக்கிறார். படத்தில் நம்ம ஹீரோ பாலக் லால்வானியை காதலிக்கிறார் இருப்பினும் பூனம் பாஜ்வாவின் மேல் ஒருகண்ணாக இருக்கிறார் நமது ஹீரோ.

இந்த சேரி வாழ் மக்களின் அமைதியை ஒரு சிலர் குழப்பும்படி செய்கின்றனர். அவர்கள் ஏன் அவ்வாறு செய்கின்றனர், அதனால் அங்குள்ள மக்களுக்கு என்னென்ன இன்னல்கள் வருகின்றன என்பதையும் மற்றும் ஜீவி.பிரகாஷின் தந்தை பாபா பாஸ்கர் கொல்லப்படுகிறார் அதற்கு காரணம் பார்த்திபன் தான் என்ற நோக்கில் ஜிவி.பிரகாஷ் அவரை பழிவாங்குவது போலும் காட்டியுள்ளனர். இறுதியில் அவர் தந்தை கொலைக்கு யார் காரணம் மற்றும் மக்களின் இன்னல்களுக்கு யார் காரணம் என்பதை கன்டுபிடித்து அவர்களை அழிக்கிறாரா என்பதை கதைக்களமாக கொண்டுள்ளது இந்த படம்.

திரைவிமர்சனம்

படத்தில் ஜீவி.பிரகாஷ் சேரி பையனாக நடித்திருப்பது அவருக்கு மிகவும் நன்றாகவே பொருந்தியுள்ளது. சர்வம் தாளமையம் படத்தைவிட இந்த படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்தியுள்ளது. படத்தில் விறுவிறுப்பிற்கு மிகுந்த பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்றே சொல்லலாம். அந்த இடத்தில் எல்லாம் பூனம் பாஜ்வா சிறிது பூர்த்தி செய்கிறார்.

ட்ரைலர்

படத்தின் முக்கியமான டப்பிங் சரிவர பொருந்தவில்லை. எடிட்டிங் சுமாராகவே உள்ளது. அதேபோல் பூனம் பாஜ்வா மற்றும் ஜீவி.பிரகாஷ் இடையே உள்ள கதாபாத்திரம் இந்த படத்தின் கதைக்களத்தை வைத்து பார்த்தால் சரிவர பொருந்தவில்லை.

படத்தின் வில்லன் யார் என்பதை ரகசியமாக வைக்க இயக்குனர் அதிகமாக மெனக்கெட்டுள்ளார். ஆனால், இவர் தான் வில்லன் என்பது படம் பார்க்கும்போது அப்பட்டமாக தெரிகிறது. முக்கியமாக யோகி பாபுவிற்கு காமெடி காட்சிகள் குறைவாகவே உள்ளது.

மொத்தத்தில் இந்த படத்தின் திரைக்கதையில் சுவாரசியம் மிகவும் குறைவு.

மதிப்பெண்

இந்த படத்திற்க்கு சினிபுக் 5க்கு 1.8கொடுக்கிறது.

Kuppathu Raja review - GV Prakash, Poonam Bajwa

Kuppathu Raja

Movie cast and crew

Directed by Baba Bhaskar
Produced by Saravanan.M, Siraj.S, Saravanan.T
Starring G. V. Prakash Kumar, Parthiban, Palak Lalwani, Poonam Bajwa, Yogi Babu
Music by G. V. Prakash Kumar
Cinematography Mahesh Muthuswami
Edited by Praveen K. L.
Production company S Focuss
Release date 5 April 2019
Country India
Language Tamil

Leave a comment