
kuppaimeni-uses -benifits
Amazing uses of kuppaimeni (acalyphaindiaca)….
குப்பைமேனியின் அற்புத பயன்கள்:-
குப்பைமேனியை நாம் அனைவரும் கண்டிப்பாக ரோட்டு ஓரங்களில் பார்த்திருப்போம். அது சாதாரண குப்பை செடி என்று நினைத்து நாம் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்திருப்போம். ஆனால்,இதன் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்தால் இந்த மூலிகையை விடமாட்டோம். ஆம், இந்த குப்பைமேனி மூலிகையில் நிறைய நன்மைகள் உள்ளன. வாங்க பார்ப்போம்.
- குப்பைமேனி என்ற மூலிகை குப்பையாக இருக்கும் நமது மேனியை புதுமேனியாக மாற்றுவதே இந்த குப்பைமேனி. குப்பைமேனி மூலிகையில் உப்பு சத்து அதிகம் உள்ளது.
- விஷக்கடிகளுக்கு இந்த குப்பைமேனி இலையை அரைத்து உடம்பு முழுவதும் நன்கு தேய்த்து காய வைக்க வேண்டும். காய வைக்கும் பொழுது உடலில் அதிக எரிச்சல் ஏற்படும். அப்பொழுது வெந்நீரில் நன்கு குளித்து விட வேண்டும். இதே போல 48 நாட்கள் செய்து வர விஷக்கடி சம்பத்தப்பட்ட நோய்கள் தீரும். குப்பைமேனியை இப்படி பயன்படுத்தும் போது 48 நாட்களுக்கு கத்திரிக்காய் சாப்பிடக்கூடாது.
- குப்பைமேனி இலையுடன் பூண்டு சேர்த்து அரைத்து பாலில் கலந்துக் குடிக்க வயிற்றில் உள்ள புழுக்கள் நீங்கும். சிறு குழந்தைகள் முதல் பெரியர்வர்கள் வரை அனைவரும் இப்படி சாப்பிட்டால் நம் உடம்பு சுத்தமாகும்.
குப்பைமேனி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து காயப்பட்ட இடங்களில் தேய்த்தால் வெளி காயத்தை உடனே ஆற்றிவிடும். - குப்பை மேனி இலையை முகத்திற்கு தேய்த்தால் முகப்பரு நீங்கி முகம் பொழிவு பெரும்
- தீடிரென வயிற்று வலி வரும் போது, இந்த குப்பை மேனி இலையுடன் சிறிது உப்பு வைத்து அரைத்து சாப்பிட்டால் வயிற்று வலி உடனே சரியாகி விடும்.
- மேலும், குப்பைமேனி இரத்தத்தை சுத்தம் செய்யும் ஆற்றல் பெற்றவையாம்.
- குப்பைமேனி இலையை வைத்து துவையல் செய்து அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மூல நோய் குணமாகும்.
- மூட்டு வலிக்கு இந்த இலையை நல்லெண்ணெய் விட்டு காய்ச்சி தேய்த்து வந்தால் மூட்டு வலி குணமாகும்.