
ottha ottu muthyaa movie update
நீண்ட இடைவெளிக்கு பிறகு காதநாயனாகும் கவுண்டமணி- ரசிகர்கள் உற்சாகம்…!!!
Koundamani to be Kathanayan after a long gap- fans are excited…!!!
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்கும் கவுண்டமணி. தனது 84 – ஆவது வயதில் ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
90 -களில் அனைத்து படங்களிலும் கவுண்டமணி- செந்தில் காமெடி ஒரு தனி இடத்தை பெற்றிருக்கும் எனலாம். மக்களின் மனம் கவர்ந்த காமெடியன் கவுண்டமணி. அவரின் காமெடி இன்று வரை அனைவராலும் கவரப்பட்டவை தான். கவுண்டமணி அனைத்து படங்களிலும் கவுண்டர் கொடுக்கும் காமெடி தான் கொடுப்பர். அதனாலேயே, அவரின் பெயர் கவுண்டமணி என்று ஆனது. ஆம், அவருடைய இயற்பெயர் “சுப்பிரமணியன் கருப்பையா”. அவருடைய கவுண்டர் காமெடியால் தான் அவரின் பெயர் கவுண்டமணி என்று ஆனது.
தற்போது, தனது 84 -ஆவது வயதில் கவுண்டமணி, இயக்குனர் சாய் ராஜகோபால் இயக்கத்தில் “ஒத்த ஓட்டு முத்தையா” எனும் படத்தில் கதாநாயனாக நடிக்க உள்ளார். இப்படத்தின் தலைப்பிற்கு ஏற்ப, படம் காமெடி கலந்த முழு நீள அரசியல் படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் கவுண்டமணியுடன் இணைந்து, யோகி பாபு, மொட்டை ராஜேந்தரன், தம்பி ராமையா, மாரிமுத்து மற்றும் சிங்கம் புலி என பெரிய காமெடி நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். மேலும், இப்படத்தில் மறைந்த நகைசுவை நடிகர் மயிலசாமியின் மகன் அன்பு, நகைசுவை நடிகர் சிங்கம் முத்துவின் மகன் வாசன் கார்த்திக் மற்றும் பழம்பெரும் நடிகர் நாகேஷ் அவரின் பேரன் கஜேஷ் ஆகியோர் முக்கிய காதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கவுண்டமணி நடிக்க இருக்கும் ஒத்த ஓட்டு முத்தையா படத்தை எதிர்பார்த்து உள்ளனர் ரசிகர்கள்……