
captain millar movie shooting resume
கேப்டன் மில்லர் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது….
Captain Miller shooting resumes….
தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் கேப்டன் மில்லர். இப்படத்தில் தனுஷ் ஜோடியாக ப்ரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும், சிவராஜ் குமார்,சஞ்சீப் கிஷன் மற்றும் நிவேதிதா சதீஸ் போன்ற நட்சத்திர பட்டாளமே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜீ.வீ.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பல மாதங்களாவே நடைபெற்று வருகிறது. தற்போது படப்பிடிப்பு தென்காசியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் வெடிகுண்டு வெடிப்பது போன்ற காட்சிக்காக குண்டு வைக்கப்பட்டது. குண்டு வெடிப்பு போன்ற காட்சிகளுக்கு முறையாக உரிமம் பெறவில்லை என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் தீடிரெனே படப்பிடிப்பை நிறுத்த உத்தரவு கொடுத்துள்ளார்.
இதனால், படப்பிடிப்பு தற்காலிமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது, அதே இடத்தில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி விட்டனர் கேப்டன் மில்லர் படக்குழுவினர். முறையாக உரிமம் வாங்கி தான் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியதாக பட தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது கேப்டன் மில்லர் திரைப்படம். இப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் என்று படக்குழுவினர் ஏற்கனேவே தெரிவிர்த்துள்ளனர். விரைவில் பட ட்ரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.