என்னது???? கீர்த்தி சுரேஷ் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைகிறாரா ????

wait loading cinibook video

நடிகையர் திலகம்  படம் கீர்த்தி சுரேஷ்க்கு திரையுலகில் ஒரு திருப்புமுனையாக அமைந்த படம் என்று சொன்னால் அது மிகையாகாது.  ஏன் என்றால், இதுக்கு முன்னால் அவர் நடித்த படங்களில் அவருடைய நடிப்பை பலரும் கிண்டல் செய்தார்கள்.  ஆனால்,தற்போது “நடிகையர் திலகம்”  படத்திற்கு பிறகு அந்த இமேஜ் மாறி போனது.  இப்ப வரவிருக்கும்  படங்களில் கீர்த்தி தான் நடித்து வருகிறார். முக்கிய பிரபலங்களுடன் ஜோடி சேர்கிறார் கீர்த்தி சுரேஷ். சாமீ-2  படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்து உள்ளார். vijay -62 படத்திலும் தளபதிக்கு ஜோடியாக  நடிக்கிறாராம்  . தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கிலும் கீர்த்திக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.  இதற்கிடையே, கீர்த்தி சுரேஷ் மீண்டும் சிவகார்த்தி உடன் இணைந்து நடித்து வருவதாக செய்தி வெளிவந்துஉள்ளது. கீர்த்தி தமிழில் அறிமுகமான படம் ரஜினி முருகன் .

       சிவகார்த்திக்கேயனுடன்  உடன் இணைத்து கீர்த்தி  இதுவரை இரண்டு படங்கள் நடித்து உள்ளார். பொன்ராம் கண்ணன்  இயக்கத்தில் தற்போது தயாராகி வரும் “சீமா ராஜா”  படத்தில் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைகிறார் . இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு கெஸ்ட் ரோல் பண்ணறாரம். “சீமா ராஜா”  படத்தில் சிவாகார்த்திகேயனுக்கு  ஜோடியாக சமந்தா”   நடிக்கிறாராம். மேலும், சூரி,நெப்போலியன் மற்றும் சிம்ரன்  முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். “இமான்” இசையில், “24ஏம் ஸ்டுடியோஸ்” தயாரிப்பில் இப்படம் உருவாகிவருகிறது .

 

இப்படம் படப்பிடிப்பு நடந்து வரும் வேளையில், எப்போது படம் வெளிவரும் என்ற தகவல் எதுவும் இன்னும் வெளிவரவில்லை.  கீர்த்தி சுரேஷ்க்கு இப்ப மவுசு அதிகம் தான்……!!!!!! . அவர் சினிமா வாழ்க்கையில் “நடிகையர் திலகம்” படத்திற்கு முன்பு, “நடிகையர் திலகம்”  படத்திற்கு பிறகு என இரண்டு விதமாக பிரித்து பேசப்படும் இனி வரும் காலங்களில்…; .

You may also like...