கீர்த்தி சுரேஷுக்கு வந்த வாழ்வை பாருங்கள்…..!!!!!ராஜமௌலி படத்தில் கீர்த்தியா??????

தெலுங்கில் “மகாநதி” படம் வெளிவந்து இன்றுவரை வெற்றிகரமாக ஓடி கொண்டுஇருக்கிறது. தமிழிலும் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளிவந்தது சிறந்த படமாக ஓடிகொண்டுஇருக்கிறது . இப்படத்தில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார். துல்கர் சல்மான், சமந்தா என பலரும் நடித்துள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.படம் வெளிவருதற்க்கு முன் சாவித்திரி கதாபாத்திரத்திற்கு கீர்த்தியா?????? என சிலர் கிண்டல் செய்தார்கள். ஆனால் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான பின்பு படத்தை பார்த்து பலரும் கீர்த்தி சுரேஷுக்கு பாராட்டு தெரிவித்துஉள்ளனர். கீர்த்தி சுரேஷ் “நடிகையர் திலகம்” சாவித்திரி கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்து உள்ளார் என அனைவரும் கூறிஉள்ளனர்.

தெலுங்கில் சிறந்த இயக்குனர் ராஜமௌலி இப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டி உள்ளார். “சாவித்ரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் இதுவரை பார்த்திராத வகையில் மிக சிறப்பாக நடித்து உள்ளார். மேலும் அவர் மறைந்த நடிகை சாவித்திரியின் நடிப்பை உயிர்ப்பித்து உள்ளர். ஜெமினிகணேசன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள துல்கர் சல்மான் சிறப்பாக நடித்துஉள்ளர். மேலும் நான் துல்கர் சல்மானின் ரசிகன் ஆகி விட்டேன் என்று இயக்குனர் ராஜமௌலி பாராட்டு தெரிவித்துஉள்ளர்”.




இதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷுக்கு தென்னிந்தியா சினிமா துறையில் அவருக்கு மவுசு கூடி வருகிறது என்றே சொல்லலாம்.பாகுபலி இயக்குனர் ராஜமௌலி தற்போது ராம்சரணை வைத்து இயக்க போகும்

“ஆர்ஆர்ஆர்” படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.ஆனால் அது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.படக்குழுவின் சார்பில் எந்த ஒரு செய்தியும் இன்னும் வரவில்லை……பார்க்கலாம் என்னனு??

கமல் ஜோடியாக நடிக்க ஆசை-கீர்த்தி சுரேஷ் விருப்பம்…..!!!

 

You may also like...