கீர்த்தி சுரேஷின் அடுத்த படம்- மறைந்த முதல்வர் ஜெயலலிதாவாக கீர்த்தி சுரேஷ்?????
இன்று வெளியான நடிகையர் திலகம் படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷுக்கு பல பாராட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. சாவித்திரி கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவில்லை , மாறாக சாவித்திரியாகவே மாற்றியுள்ளார் என்று சொல்லாம். அந்த அளவுக்கு சிறப்பாக நடித்துஉள்ளர் இந்த படத்தில். முதலில் கீர்த்தியை கிண்டலும், கேலியும் செய்தவர்கள் இந்த படத்திருக்கு பிறகு கீர்த்தியை பாராட்டி வருகின்றனர். இந்த படம் கீர்த்தி சுரேஷுக்கு சினிமா துறையில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
சாவித்திரி வரலாற்றை போல மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா ஜெயலலிதாவின் வரலாற்றை படமாக எடுக்க வேண்டும் எனவும் அதில் முதலில் ஜெயலலிதாவாக ரம்யாகிருஷ்ணன் நடிக்க போவதாக செய்திகள் வெளிவந்தன.ஆனால், தற்போது நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு ஜெயலதாவாக கீர்த்தி சுரேஷ்யை நடிக்க வைக்கலாம் என பேசப்படுகிறது. நடிகையர் திலகத்திற்கு பிறகு கீர்த்திக்கு பட வாய்ப்புகள் அதிகம் தேடி வரும் என்பதில் சந்தேகம் இல்லை………!!!