“ரஜினி” மகனாக “பாபி சிம்கா”!!, முக்கிய வேடத்தில்- மக்கள் செல்வன்!!! கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில்………

ரஜினியின் அடுத்த படம் :-  கபாலி பிறகு வரிசையாக பா.ராஜித் இயக்கத்தில் “காலா “, சங்கர் இயக்கத்தில் 2.0 என படங்களை வைத்து உள்ள ரஜினி தற்போது கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க போகிறார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. இந்த படத்தை சன் பிட்சர்ஸ் தயாரிக்க போவதாகவும், அதில் ரஜினி க்கு ஜோடியாக “சிம்ரன்”  மேலும் ரஜினி மகனாக “பாபி சிம்கா” நடிக்க போவதாக கூறப்படுகிறது. மக்கள் செல்வன் – “விஜய் சேதுபதி” இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க அனிருத் இசையில் இப்படம் உருவாக உள்ளது. இந்த படத்திற்கு பெயர் தேர்ந்தெடுக்காத நிலையில், இந்த படத்தை படத்தை பற்றிய செய்திகள் வெளிவந்து உள்ளன. ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. காலா படத்தின் பாடல் வெளிவந்து மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைபெற்றுஉள்ளது என்பது குறிப்பிடத்தக்கது