கர்நாடகாவில் பரபரப்பு சித்தராமையாவின் தர்ணா போராட்டத்தில் திருப்புமுனை

பரபரப்பான கர்நாடகா அரசியல் சூழலில் 104 இடங்களில் பாஜக வெற்றிபெற்று பெரும்பான்மை பெற்றது இருப்பினும் தனி பெரும்பான்மை பெறமுடியவில்லை அதனால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நிலவியது. இதனிடையில் 37இடங்கள் வென்ற JDC மற்றும் 78இடங்கள் வென்ற காங்கிரஸ்சும் இணைத்து குமாரசாமி முதல்வராக தேர்ந்தெடுத்து ஆட்சி அமைக்க ஆளுநரிடம் கோரியது மாறாக ஆளுநர் “வாஜிபாய் ருடபாய் வாலா” பாஜகவின் மாநில தலைவர் எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைப்புவிடுத்தார்.

இந்த பரபரப்பு அரசியல் சூழல்களுக்கு இடையில் இன்று காலை, பாஜகவின் கர்நாடகா மாநில தலைவர் திரு எடியூரப்பாவிற்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார் அதுமட்டுமல்லாது 11நாட்களில் தனிப்பெரும்பானமையை நிரூபிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, தனி பெரும்பான்மை இல்லாத கட்சி ஆட்சி அமைக்க கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தார் அனால் இந்த வழக்கும் அவர்களுக்கு எதிராகவே திரும்பியது. கடைசியில் சித்தராமையா தலைமையில் சட்டசபை வளாகத்தில் காந்தி சிலை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார் இவர்களுடன் குலாம் நபி ஆசாத், அசோக் கெலாட் மற்றும் கர்நாடக காங்கிரஸ். தலைவர் பரமேஷ்வர் ஆகியோரும் உடன் இருக்கின்றனர். இதன் மூலமாக ஏதும் திருப்பவும் வருமா என்று காங்கிரஸ் போராடிக்கொண்டிருக்கிறது.