கனா ஒரு கனவு படமா?? கனவை முறியடிக்கும் படமா???

wait loading cinibook video

  சினிமா துறையில் ஸ்போர்ட்ஸ் படம் என்றாலே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெரும். அந்த வகையில் இன்று வெளியான கனா படம் எப்படி வந்திருக்கு? மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதா?? இல்லையா ??? என்பதை பார்க்கலாம்…..

கதைக்கரு:-

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருங்காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யாராஜேஷ் மற்றும் சத்யராஜ் நடிப்பில் கனா படம் ஒரு பெண் வீராங்கனை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் சத்யராஜ் ஒரு விவாசாயியாக வருகிறார். அவருக்கு விவசாயத்தை தாண்டி கிரிக்கெட் மேல் அதிக ஆர்வம். அவர் ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் பார்க்கும் போது இந்தியா தோல்வியடைந்ததை பார்த்து சத்யராஜ் மிகவும் வருத்தப்பட்டு அழுகிறார். இதைக் கண்ட மகள் ஐஸ்வர்யாராஜேஷ் தன அப்பாவை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்து அடுத்த உலகக்கோப்பையில் தான் சேர்ந்து வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் வெறித்தனமாக அதற்கான பயிற்சி எடுக்கிறார். மகள் ஐஸ்வர்யா கிரிக்கெட் விளையாடி வெற்றி பெற்றாரா??? தன்னுடைய அப்பாவை சந்தோசப்படுத்தினாரா???? என்பது மீதிக்கத்தை. வெறும் விளையாட்டு மட்டும் இல்லாமல் ஒரு விவசாயி படும் கஷ்டத்தை எடுத்துக்காட்டிருக்கிறார் அருண் காமராஜ்.

திரைவிமர்சனம்:-

படம் பார்க்கும் அனைவருக்கும் குறிப்பாக பெண்களுக்கு கண்டிப்பாக ஒரு ஊக்கத்தை கொடுக்கும் படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இயக்குனர் அருங்காமராஜ் படத்தை ரொம்ப விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளார். இது ஒரு விளையாட்டு சார்ந்த படம் மற்றும் இல்லை. படத்தில் ஒரு விவாசாயி படும் கஷ்டங்கள், வேதனைகள், கடன் பிரச்சனைகள் என அனைத்தையும் ரொம்பவே உணர்ச்சிப்பூர்வமாக உணர்வைத்துள்ளார் இயக்குனர் அருண் காமராஜ். அதுமட்டுமல்லாமல், ஒரு விவசாயி மகள் கிரிக்கெட் வீராங்கனையாக வருவதற்கு எப்படி எல்லாமும் கஷ்டப்படுகிறார்கள் என்று அழகா எடுத்துகாட்டியுள்ளார் இயக்குனர் . உண்மையில் அருண் காமராஜுக்கு இது முதல் படமா என்று சந்தேகம் எழும் பார்ப்பர்வர்களுக்கு. அந்த வகையில் ரொம்ப கச்சிதமாக படத்தை கொண்டு சென்ற விதம் அற்புதம்.

 படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்கவில்லை உண்மையில் ஒரு கிரிக்கெட் வீராங்கனையாவே வாழ்ந்துள்ளார்.  அந்த அளவுக்கு நடிப்பில் அசத்தியுள்ளார். உண்மையா கிரிக்கெட் வீராங்கனை போலவே கச்சிதமாக நடிப்பை வெளிப்படுத்திஉள்ளார். ஒரு கிராமத்தில் விவசாயி மகளாக இருக்கும் ஐஸ்வர்யாராஜேஷ் தன் அப்பாவுக்காக கிரிக்கெட் கற்றுக்கொள்ளும் போது அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன என்ன??? மற்றும் அவர் படும் அவமானங்கள், வேதனைகள் என அனைத்தையும் படத்தில் உணர்ச்சிப்பூர்வமாக ரொம்ப அழகாக நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார் ஐஸ்வர்யா. சத்தியராஜ் தன் மகளுக்கு ரொம்பவே உறுதுணையாக இருந்து மகள் கிரிக்கெட் விளையாடி வெற்றி பெற தன் பங்கிற்கு உதவிகிறார். அந்த வகையில் ஒரு சிறந்த தந்தையாக அனைவர் மனதில் நிற்கிறார்.

படத்தில் இரண்டாம் பாகத்தில் சிவகார்த்திகேயன் கிரிக்கெட் பயிற்சியாளராக வருகிறார்.  அவர் எப்பவும் போல சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் காமெடி சீன் நடித்து அதிகம் பார்த்த நமக்கு இந்த படத்தில் சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் கொஞ்சம் புதிது தான்.

படத்தில் இசை செம. பின்னணி இசையில் கலக்கியுள்ளார் . படத்தில் ஒளிப்பதிவு நல்ல அமைந்துள்ளது. படம் விறுவிறுப்பாக செல்கிறது. இரண்டாவது பாகம் எல்லாம் ஜெட் வேகத்தில் செல்கிறது. படத்தின் கிளைமாக்ஸ் உண்மையில் எதோ கிரிக்கெட் மைதானத்தில் உக்கார்த்திருப்பதை போல தோன்றுகிறது. அந்த அளவுக்கு கிரிக்கெட் மேட்ச் நடக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் முயற்சிக்கு இந்த படதிற்காக அவர் தேசிய விருது வாங்குவார் என்பதில் சந்தேகம் இல்லை.

மொத்தத்தில் கனா அனைவரையும் நல்ல கனவு காண வைக்கும். வாழ்க்கையில் ஒரு உத்வேகத்தை தோற்றுவிக்கும். அனைவரும் திரையரங்கு சென்று குடும்பத்துடன் பார்க்கும் படம்…………

You may also like...