இந்தியன்-2 படத்தில் இணையும் பிரபலங்கள் யார்??? யார்???

wait loading cinibook video

1996-இல் இயக்குனர் சங்கர்  இயக்கத்தில் கமல்  நடித்த படம் தான் இந்தியன். கமல் நடித்த படங்களில் இந்தியன் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்த படம் என்று சொல்லலாம் . அந்த அளவுக்கு கதைக்களம் மற்றும் கமலின் நடிப்பு மிகவும் சிறப்பாக அமைத்திருக்கும். கமல் இரண்டு வேடங்களில் மிக சிறப்பாக நடித்திருப்பார். அந்த படத்தில் ரகுமான் இசையில் பாடல்களும் சரி , செந்தில்-கவுண்டமணி காமெடியும் சரி, இரண்டுமே செம என்று சொல்லும் அளவுக்கு இருக்கும். இன்று வரை நீங்க இடம் பிடித்த இந்தியன் படத்தின் அடுத்த பாகம் உருவாக போகிறது என்று ஏற்கனவே,  போன வருடத்திலேயே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் அறிவித்து இருந்தார்.  தற்போது பிக்பாஸ் சீசன் 2 முடித்ததும் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கும் என செய்தி வெளிவந்து உள்ளது.

இந்தியன்-2  படத்தில் இணையும் பிரபலங்கள் யார்??? யார்???
இந்தியன்-2 படத்தை LYCA நிறுவனம் தான் தயாரிக்க போகிறதாம். மேலும் இந்த படத்திருக்கு பாடலாசிரியர்  தாமரை  தான் பாடல்கள் இயற்ற ஒப்பந்தம் ஆகியுள்ளார் . மேலும் அனிரூத் இசையமைக்க உள்ளார் என செய்தி வெளிவந்து உள்ளது. அதுமட்டும் அல்லாமல் பிரபல எழுத்தாளர்கள் வைரமுத்து,ஜெயமோகன்,கபிலன் மற்றும் லட்சுமி சரவணகுமார்  இவர்கள் அனைவரும் இந்தியன்-2 படத்திற்கு வசனம் எழுத போகிறார்கள். இந்த படத்தில், முதல் முறையாக சங்கர்-தாமரை இனைய போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன் -2 வில் மீண்டும் சங்கர்-கமல் கூட்டணி, அனிரூத் இசை, தாமரை, பிரபல எழுத்தாளர்கள் என அனைத்தும் சிறப்பாக அமைய உள்ளது என்றே சொல்லலாம்…….

Leave a comment

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *