காளி பட திரைவிமர்சனம் -விஜய் ஆண்டனி, சுனைனா,அஞ்சலி, அமிர்த நாயர், மற்றும் ஷில்பா மஞ்சுநாத்

காளி படம் எப்படி இருக்கு?

விஜய் ஆண்டனி  நடிப்பில் வெளிவந்து உள்ள இப்படம் எப்படி உள்ளது? விஜய் ஆண்டனிக்கு உரிய style- இல் எப்பவும் போல செண்டிமெண்ட் அல்லது சைக்கோ கதை போல இருக்கா? இல்லை, வேறு பாணியில் இக்கதை அமைந்துஉள்ளதா? என்பதை பார்ப்போம் வாருங்கள்…..


கதைக்களம் :-

படம் வெளிவருதற்கு முன்பே படத்தின் முதல் ஏழு நிமிட காட்சிகளை ஏற்கனவே விஜய் ஆண்டனி வெளியிட்டு இருந்தார். அந்த ஏழு நிமிட காட்சிகளின் படி கதை செல்கிறது.அமெரிக்காவில் விஜய் ஆண்டனி ஒரு டாக்டராக, தனது அப்பா, அம்மா உடன் வசிக்கிறார். அவருக்கு அடிக்கடி ஒரு கனவு வருகிறது. கனவில் எதோ, ஒரு கிராமத்தில் ஒரு மாடு சிறுவனை துரத்துவது போலவும், அதே சமயம் பாம்பு ஒன்று தெரிகிறது. அத்துடன் அவர் ஒரு சூழ்நிலையில் தான் ஒரு ஆசிரமத்தில் இருந்து தத்துஎடுக்கப்பட்டு வளர்த்தது தெரியவர.  வளர்த்தவர்கள் அனுமதியுடன் தன் பெற்றோரை தேடி இந்தியா வருகிறார் விஜய் ஆண்டனி. அங்கு வந்தவுடன் தான் தெரிகிறது,  அவர் அம்மா இறந்து விட்டார் என்று.  பின்பு எப்படி இறந்தார்? என்று அலசுகிறார் விஜய். அவருடைய அப்பாவை தேடி அலைகிறார்.  இறுதியில் விஜய் அவர் அப்பாவை கண்டுபிடித்தாரா?? இல்லையா?? என்பது தான் மீதி கதை.படத்தில் அம்மா ,அப்பா செண்டிமெண்ட்க்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்துஉள்ளர் விஜய் ஆண்டனி.  படத்தின் இடை இடையே காதல் காட்சிகளும், காமெடியும் இடம் பெற்று உள்ளது.
திரைவிமர்சனம் :-

விஜய் ஆண்டனி தனக்கு என்ன வருமோ? என்று அறிந்து  தனது பாணியில் நடித்து உள்ளார் . மீண்டும் பிச்சைக்காரன் போல ஒரு செண்டிமெண்ட் கதையை தான் கொடுத்து உள்ளார் .  அவர் நடிப்பில் எப்பவும் போல எந்த வித்தியாசம் இல்லாமல் ரொம்ப இயல்பா நடித்து உள்ளார். ஆனாலும், எப்பவும் ஒரே மாதிரியானா கதைக்களத்தில் நடித்தால் மக்களுக்கு சலிப்பு ஏற்படும் என்பதை புரிந்து அவர் தன்னுடய அடுத்த படத்திலாவது வேறு மாதிரி முறிச்சித்தால் நல்ல இருக்கும் ,  என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் முதல் பாதியில் யோகிபாபு சிறப்பாக நடித்து உள்ளார். .மேலும்  விஜய் ஆண்டனி அப்பாவை தேடக்கொடுக்கும் ஐடியா, counter காமெடி என யோகி கலக்கியுள்ளார். உண்மையில் யோகிபாபுக்கு ஒரு கிளாப். மேலும் இப்படத்தின் ஆங்கு,ஆங்கே சுனைனா,அஞ்சலி, அமிர்த நாயர், மற்றும் ஷில்பா மஞ்சுநாத் வருகிறார்கள்.  கதையில் இடையே வரும் காதல் காட்சிகள் கதைக்கு பொருத்தம் இல்லாமல் இருந்தது போல் தோன்றியது. விஜய் ஆண்டனி  தன்னுடைய அப்பாவை தேடும் காட்சிகளில் மூன்று விதமான வேடங்களில் நடித்து உள்ளார்.  அதுவும் அந்த அளவுக்கு எடுபடவில்லை.  மேலும் அந்த காட்சிகள் எல்லாமே  மெதுவாக செல்வது போல தெரிகிறது . “வணக்கம் சென்னை” போன்ற ஒரு வெற்றி படத்தை கொடுத்த “கார்த்திகா உதயநிதி” தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

மொத்தத்தில் படத்தில் முதல் பகுதியை யோகிபாபு அழகா கொண்டு சென்றுள்ளார். அடுத்த பகுதி கொஞ்சம் விறுவிறுப்பு குறைத்து மெதுவாக செல்லுகிறது. விஜய் ஆண்டனி நடிப்பு எப்பவும் போல தான் இந்த படத்திலும் உள்ளது. இசையில் விஜய் ஆண்டனி மனம் நிறைவடைய செய்து உள்ளார் .
இந்த படத்திற்கு cinibook கொடுக்கும் rating 5 க்கு 2.5 கொடுக்கலாம்.

You may also like...