
kalyana murungai benifits
மக்களால் கல்யாண முருங்கை , முள் முருங்கை கல்யாண முருக்கன் முறுக்க மரம் மற்றும் முள் முருக்கன் என பல பெயர்களில் கிராமப்புற மக்களால் அழைக்கப்படுகிறது. கல்யாண முருங்கை மரம் கிராமப்புறங்களில் அதிகம் காணலாம். முள் முருங்கை என்னும் கல்யாண முருங்கையில் நிறைய மருத்துவக்குணங்கள் உள்ளன. அவை என்ன என்ன என்று பார்ப்போம்.
முள் முருங்கையின் மருத்துவ குணங்கள்:-
பெண்கள் சம்பத்தப்பட்ட கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு முள் முருங்கை ஒரு அற்புத மருந்து. பெண்கள் தலைக்குக் குளிக்காமல் இருந்தால் , மாதவிடாய் சரியாக வராமல் இருந்தால் இந்த கல்யாண முருங்கை இலையை இடித்து ஒரு டம்பளர் அளவு சாறு எடுத்து அதில் பனங்கற்கண்டு கலந்து காலை வெறும் வயிற்றில் குடித்து வர மாதவிடாய் பிரச்சனை சரியாகும். கர்ப்பபையில் எதாவது கட்டி இருந்தாலும் சரி, மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் வயிற்று வலி என அனைத்திற்கும் கல்யாண முருங்கை இலையின் சாறை குடித்து வர கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் விரைவில் குணமாகுமாம். அது மட்டுமல்லாமல் முள் முருங்கை சளி , இருமலைப் போக்க வல்லது. கல்யாண முருங்கையின் இலையைப்பறித்து அதனுடன் பச்சரசி மாவுடன் கலந்து மிளகு சேர்த்து ரொட்டி சுட்டு சாப்பிட்ட்டால் சளி , இருமல் நீங்கும்.
தற்போது உ ள்ள சூழ்நிலையில் குழந்தை பிறந்தவுடன் பல பெண்களுக்கும் தாய்ப்பால் சுரப்பதில் பிரச்சனைகள் உள்ளது. தாய்ப்பால் நன்றாக சுரக்க இந்த கல்யாண முருங்கை இலையுடன் சின்ன வெங்காயம் மற்றும் தேங்காய் துண்டுகள் சேர்த்து நெய் விட்டு வதக்கி சாப்பிட்டு வர விரைவில் சரியாகும். மேலும் இந்த இலையுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் பூசி வர தோல் நோய்கள் நீங்கும். மேலும் வாந்தி , வயிற்று வலி மற்றும் பித்த காய்ச்சல் ஆகியவற்றை நீக்க வல்லது. செரிமானத்தை அதிகரிக்கும் தன்மை பெற்றது இந்த முள் முருங்கை…