Kaatrin Mozhi Movie Review | Jyothika | Vidaarth | RadhaMohan

Review about recently released tamil movie “Katrin Mozhi” movie. Starring Jyothika, Vidaarth, Lakshmi Manchu, Kumaravel, M.S. Bhaskar, Manobala, Mohan Raman, Uma Padmanabhan, SindhuShekaran, Seema Taneja, Master Tejas and many others, Directed by Radhamohan, And Music Composed by A.H. Kaashif.

ஹிந்தியில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற ஒரு திரைப்படம். வசூலிலும் கிட்டத்தட்ட 50கோடிக்கு மேல் சென்று சாதனை படைத்தது. மேலும் அதில் நடிகை வித்யாபாலனுடைய கதாபாத்திரம் மிகவும் நன்றாக அமைந்திருக்கும். அதேபோல் தமிழில் அவரது இடத்தில ஜோதிகா நடித்திருக்கிறார்.

கதைக்களம்

நடிகை ஜோதிகாவுக்கு மீடியாவினுள் வரவேண்டும் என்ற ஒரு கனவு இருக்கிறது. அதற்காக அவர் முயற்சிசெய்து கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் நடிகர் விதார்த்தை திருமணம் செய்கிறார் மேலும் அவர் நினைத்த வண்ணம் rj ஆகிவிடுகிறார். மேலும் வீட்டிலும் ஒரு நல்ல மனைவியாக நடந்துகொள்கிறார். மேலும் ஜோதிகா rj ஆனதும் அவரது குரல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது அதனால் அனைவரும் விரும்பி அவரிடம் பேச முயல்கின்றனர். இதற்கிடையில் ஜோதிகா கணவர் விதர்த்துக்கு இது பிடிக்கவில்லை. இறுதியில் அவர் தனது மனைவியை விரும்பிய வேலையை செய்ய விட்டாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதைக்களமாக அமைத்துள்ளது.

திரைவிமர்சனம்

மொழி, அபியும் நானும் படத்திற்க்கு பிறகு டைரக்டர் ராதாமோகன் இந்தப்படத்தை தயாரித்து இருக்கிறார். இவரது முந்தய படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது, அதேபோல் காற்றின் மொழி படமும் பெரும் என்று நம்பலாம். படத்தின் கதை மிகவும் சிம்பிளாக இருந்தாலும் படம் எடுக்கபட்ட விதம் நன்றாக அமைந்திருக்கிறது. வேளைக்கு செல்லும் மனைமார்களின் குடும்பத்தில் நடக்கும் அன்றாட வாழ்வியலை அழகாக எடுத்திருக்கிறார். படத்தில் பாடல்கள் மற்றும் இசை ஓரளவுக்கு தான் இருக்கிறது என்று சொல்லலாம். ஜோதிகா, விதார்த், யோகிபாபு, மயிலசாமி மற்றும் அணைத்து திரை நட்சத்திரங்களும் தங்களுக்கு கொடுக்கபட்ட பணியை செவ்வனே செய்துள்ளார்.

இந்த வார விடுமுறைக்கு குடும்பத்துடன் சென்று பார்க்கக்கூடிய ஒரு படம் காற்றின் மொழி.

மதிப்பெண்

5க்கு 2.7 கொடுக்கிறது

You may also like...

Translate »