காலாவுக்காக கால்களை இழந்த ரஜினி ரசிகர், ரஜினி நேரில் ஆறுதல்………….

சென்னை : தனுஷ் தயாரிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் கூடியவிரைவில் வெளிவரவுள்ள ரஜினிகாந்தின் “காலா” படத்தின் பாடல் வெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது. விழாவை காண தமிழ்நாட்டில் உள்ள ரஜினி ரசிகர்கள் மற்றும் ரஜினியின் அரசியல் வட்டாரங்கள் சென்றன. விழா முடிந்து வீடுதிரும்பும் பொழுது ரஜினி ரசிகர் ஒருவர் ரயில் பயணம் செய்யும் போது செங்கல்பட்டு அருகே படிக்கட்டிலிருந்து கால்தவறி கிழே விழுந்தார் அதில் அவர் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இறுதியில் அவர் கால்கள் இரண்டும் துண்டாகிவிட்டன. காயமடைந்தவர் மதுரையை சேர்ந்த விஸ்வநாதன் வயது 33 என தெரியவந்தது.

இந்த சம்பவம் அறிந்த ரஜினிகாந்த் உடனடியாக காயமுற்ற தன் ரசிகரை மருத்துவமனைக்கு நேரடியாக சென்று பார்த்தார் மேலும் மருத்துவத்திற்கான முழு செலவையும் தானே ஏற்றுக்கொவதாகவும் மேற்கொண்டும் உதவிபுரிவதாக தெரிவித்துள்ளார். ரஜினியின் அரசியல் விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க இதுபோன்று ஒருசில உதவிகள் செய்து வருகிறார்.

You may also like...