காலா திரைவிமர்சனம், ரஜினி, ஹுமா குரேஷி, தயாரிப்பு தனுஷ்

wait loading cinibook video
இவரு சொல்ரா பேச்ச கேட்டு எதிர்பாத்து மட்டும் படத்துக்கு போய் உட்காந்துராதீங்க அப்புறம் நாங்க உத்தரவாதம் இல்லை.

ரஜினிகாந்த்  ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காலா பல அரசியல் சர்ச்சைகளுக்கிடையில் தமிழ்நாட்டில் இன்று வெற்றிகரமாக வெளிவந்தது. இன்னும் கர்நாடக மாநிலத்தில் பிரச்சனை வலுத்துக்கொண்டு தான் இருக்கிறது. உயர்நிமன்ற உத்தரவின் பேரில் பலத்த பாதுகாப்புடன் கர்நாடகத்தில் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஐரோப்பிய நாடுகளில் காலா படத்தை வெளிவிட அந்த நாடு தடை செய்துள்ளது. தமிழ் மக்களுக்கு ஸ்டெர்லைட் பிரச்சனையில் எதிராக ரஜினி பேசிவிட்டார் என  படத்தை வெளியிட தடை செய்துள்ளது.

காலா படத்தில் முதலில் ஹிந்தியில் பிரபலமான நடிகை வித்யாபாலனிடம் படக்குழு அணுகினர் ஆனால் அவர் குறைந்த கால இடைவெளியில் தேதி இல்லை என்று கூறிவிட்டார் பிறகு ஹுமா குரேஷி இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்தார்.

கதைக்களம்

படத்தின் கதை மிகவும் சுருக்கமாக சொல்லிவிடலாம் பா.ரஞ்சித் பற்றி உங்களுக்கு அனைவர்க்கும் தான் தெரியுமே அவர் எப்போதும் பிற்படுத்தபட்ட சமூகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தின் கரு அமைத்திருப்பார் என்று. அதே போல் காலாவும் தடம் மாறவில்லை.

தமிழ்நாட்டின் ஒருபகுதி மக்கள் ஒரு சில காரணங்களுக்காக மும்பையில் தாராவி என்ற நகரத்தின் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர் அங்கு உள்ள அவர்களின் நிலங்களை கைப்பற்ற நினைக்கும் நில மாபியாக்களிடமிருந்து சண்டையிட்டு இறுதியில் அவர்களின் நிலங்களையும் மற்றும் அங்கு வசிக்கும் மக்களின் உரிமைகளையும் எப்படி ரஜினிகாந்த் மீட்டெடுக்கிறார் என்பதுதான் படத்தின் முக்கிய கருவாக இருக்கிறது. சுருக்கமாக சொல்லப்போனால் கருப்பு சட்டைக்கும் வெள்ளை சட்டைக்கும் இடையே நாடாகும் யுத்தம்.

ஒரு பகுதியில் ரஜினி தாராவியின் டான்னாக வலம் வருகிறார், மற்றொரு பகுதியில் ஒரு நல்ல குடும்பத்தலைவனாகவும் வருகின்றார். படத்தின் இடையே காதல் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை ரஜினியின் இளம் வயதில் காதலித்த முன்னாள் காதலி ஹுமா குரேஷியும் ஆங்காங்கே தன் பதிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

திரைவிமர்சனம்

படம் ஆரம்பத்தில் பாகுபலியில் வருவது போல் அனிமேட்டட் மோஷன் வீடியோவில் அடித்தட்டு மக்கள் ஒடுக்கப்பட்ட முன்நடந்த கதைகளை எடுத்துரைக்கின்றனர், அது அமைத்த விதம் ஓகே.அனால் வழக்கம் போல் முதல் பகுதி காதல், மற்றும் பாடல் காட்சிகள் இரண்டாம் பகுதியில் வில்லனுடன் முழுநேர சண்டை என தமிழ் சினிமாவின் ஒரே பாணியில் செல்கிறது, அதுமட்டுமல்லாமல் படத்தில் விறுவிறுப்பு காட்சிகளுக்கு அதிக பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

ரஜினிகாந்தின் நடிப்பை பொறுத்தவரை அவருக்கு கொடுத்த பணியை சரியாக செய்திருக்கிறார் மேலும் “கியாரே…. செட்டிங்கா…” வசனங்கள் அனைத்து ஊடகங்கள் மற்றும் டாப்மாஸ்களில் அதிகம் ஒலித்தது .பஞ்ச் டயலாக்களுக்கு பஞ்சமில்லை. பா.ரஞ்சித்க்கு பஞ்ச் டயலாக் சொல்லித்தரவா வேண்டும் அவர் சுமை மேடையில் பேசினாலே அதிகம் பஞ்ச் பேசுவார் அது ரஜினிகாந்திற்கு பிளஸ்.

ரஜினி என்றாலே சந்தோஷ் நாராயணனுக்கு எப்படி இசை வரும் என்றே தெரில BGM சரி ரஜினியின் “செம கெத்து” மற்றும் “கண்ணம்மா” பாடல்களும் சரி அருமையாக இசையமைத்து இருக்கிறார்.

நானா படேகர் சிறப்பாக நடிப்பு உள்ளது மும்பை தமிழில் நன்றாக பேசி வில்லனுக்கே உண்டான ஒரு கெத்தான வசனங்கள் பேசி நடித்துள்ளார் மற்றும் ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி ஆகியோர்களுக்கு நல்ல ரோல் கொடுக்கப்பட்டுள்ளது அவர்களும் அவர்களுக்கான பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

தனுஷ் எங்கு படம் ரிலீஸ் ஆவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டுவிடுமோ என்று தமிழ்நாடு மற்றும் அனைத்து வட்டாரங்களிலும் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இதனை ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் அருமையாக அனைத்தையும் சமாளித்து சொன்ன தேதியில் அவர்வெளியிட்டிருக்கிறார் காலா மட்டுமல்ல அவர் சொன்ன தேதியில் படத்தையும் சரி, டீஸர் மற்றும் ட்ரைலர் என்றாலும் சரி சரியாக வெளியிடுவார். இதற்காக அவருக்கு எங்கள் பாராட்டுக்கள்.

காலாவின் மதிப்பெண்

சினிபுக்  இந்த படத்திற்கு 5க்கு 2.5கொடுக்கிறது 

Movie cast and crew

Directed by Pa. Ranjith
Produced by Dhanush
Written by Pa. Ranjith
Starring
  • Rajinikanth
  • Nana Patekar
  • Dev Patel
  • Huma Qureshi
  • Eashwari Rao
Music by Santhosh Narayanan
Cinematography Murali G
Edited by Sreekar Prasad
Production
company
Wunderbar Films
Distributed by Lyca Productions
Release date
  • 7 June 2018
Running time
156 minutes
Country India
Language Tamil

Leave a comment

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *