ஜூங்கா திரைவிமர்சனம், விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், யோகி பாபு

wait loading cinibook video
Review about recently released movie Junga which has Vijay sethupathi , Yogi Babu , Sayyeshaa ,Saranya Ponvannan and many others palying lead role and it was directed by Gokul.

கதை களம்

பொதுவாக நாம அணைத்து படங்களிலும் டான் போன்ற வில்லன்களை மிகவும் ஒரு வில்லத்தனமான தான் பார்த்திருப்போம் குறிப்பாக பயமுறுத்தும் வசனங்களையும் அதிரடி காட்சிகளிலும் மற்றும் மிகுந்த பணங்களை செலவு செய்வதுபோல் தான் நாம் அதிகம் தமிழ் சினிமாக்களில் பார்த்திருப்போம், ஆனால் இந்த படத்தில் நம்ம விஜய் சேதுபதி ரொம்ப கஞ்சமான ஒரு டான் கதாபாத்திரத்தில் நகைச்சுவை கலந்து நடித்திருக்கிறார்.

படத்தின் ஆரம்பத்தில் விஜய் சேதுபதி யோகிபாபு விடம் தன்னோட லட்சியம் என்ன என்பதை கூறுகிறார் அது என்னவென்றால் விஜய் சேதுபதி, அவரது தாத்தா, மற்றும் அவரது தந்தை ஒரு தியேட்டர்ரை கட்டிகாத்து வருகின்றனர். அத்தனை எப்படியாவது ஓடவைக்க வேண்டும், இதனால் அவரது அம்மாவை சந்தோசமாகவும் வைத்துக்கொள்ள முடியும் என்பது தான் அவரது லட்சியமாக இருந்தது, இதற்காக விஜய் சேதுபதி பிரான்ஸ் செல்கிறார் அங்கு சென்று தனது தியேட்டர்ரை மீட்டெடுக்க என்னவெல்லாம் செய்கிறார் இறுதியில் மீட்கிறாரா இல்லையா என்பது தான் படத்தின் முக்கிய கருவாக இருக்கிறது.

அதேபோல் பிரான்ஸ் செல்லும் விஜய் சேதுபதி அங்கு இருக்கிற சயீசாவை காதிலிக்கிறாரா இல்லை இங்கு இருக்கிற நாம நெல்லூர் பொண்ணு மடோனா செபெஸ்டியனை காதலிக்கிறாரா என்பது மற்றொரு பகுதி…

திரைவிமர்சனம்

என்ன தான் விஜய் சேதுபதி கஞ்சத்தனமாக இந்தப்படத்தில் நடித்திருந்தாலும் இந்த படத்திற்காக அவர் சுமார் 30கோடி ருபாய் செலவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அனைவரது கதாபாத்திரமும் ரொம்பவே இயல்பாவே இருக்குனு சொல்லலாம். அதேபோல சரண்யாவுடனான இமோஷனல் காட்சிகளும், மடோடாவுடனான காதல் காட்சிகளும் ரொம்ப அழகாக படத்திற்கு மெருகு சேர்த்திருக்கிறது. படத்தில் விஜய் சேதுபதி மற்றும் யோகிபாபுவின் நகைச்சுவை காட்சிகளும் மிகவும் பிரமாதமாக அமைந்துள்ளது.

திரைக்கதை பற்று சொல்லப்போனால் படத்தின் அடுத்ததடுத்த காட்சிகளை அழகாக வடிவமைத்துள்ளார் சித்தார்த் விபின். குறிப்பாக விஜய் சேதுபதி பிரான்ஸ் சென்ற பிறகும் அவரது கஞ்சத்தனத்தை காட்டுவது சிறிது நகைச்சுவை கலந்த பகுதிகளாக உள்ளது. படத்தில் கலக்கப்போவது யாரு புகழ் பாலா இந்த படத்தில் தனது கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை செவ்வனே செய்துள்ளார்.

பிரான்ஸ் ஏன் சென்று இந்த படத்தை எடுத்திருக்கிறார் என்பது தான் ஒரு பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. பாரிஸ்க்கு பதிலாக இங்கு ஒரு இடத்தில் படமாக்கப்பட்டிருந்தாலும் கூட எந்த ஒரு மாற்றமும் வந்திருக்காது. அதேபோல் படத்தில் vfx சரியாக அமையவில்லை என்றும் கூறலாம் மற்றும் லாஜிக் மீறல்கள் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ஏமி ஜாக்சன் தான் முதலில் நடிப்பதாக இருந்தது ஆனால் பிறகு சயீசா அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை மிகவும் நன்றாக செய்துள்ளார் குறிப்பாக விஜய் சேதுபதியுடனான காதல் காட்சிகளும் சரி பாடல்களிலும் சரி தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார் என்றே சொல்லலாம்.

மொத்தத்தில் குடும்பத்துடன் சென்று வார விடுமுறைகளை ஜாயாக செலவு செய்ய ஏற்ற படம் ஜூங்க…

ஜூங்க மார்க்

இந்த படத்திற்கு சினிபுக் 5க்கு 2.9 தருகிறது.

Movie cast & crew

Directed by Gokul
Produced by Arun Pandian
Dr. K. Ganesh
Vijay Sethupathi
R. M. Rajesh Kumar
Written by Gokul
Starring
  • Vijay Sethupathi
  • Sayyeshaa
  • Madonna Sebastian
  • Yogi Babu
  • Saranya Ponvannan
Music by Siddharth Vipin
Cinematography Dudley
Edited by V. J. Sabu Joseph
Production
company
Vijay Sethupathi Productions
Distributed by A & P Groups
Country India
Language Tamil

Leave a comment

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *