ஜெயம் ரவியின் அடங்க மறு படத்தின் இசை வெளியீடு …..????

ஜெயம் ரவி படங்களில் தனி ஒருவன் படம் இன்றளவும் மக்களால் பேசப்படும் படம். அந்தளவுக்கு இப்படம் அவருக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்தது எனலாம்.தனிஒருவன் படத்திற்கு பிறகு பெரிய பட்ஜெட்டில் படங்கள் அவர்க்கு வர ஆரம்பித்துள்ளன. அப்படி அமைந்த படம் தான் டிக் டிக் டிக் என்ற space சம்பத்தப்பட்ட படம். ஹாலிவுட் அளவுக்கு முயற்சித்து டிக் டிக் டிக் படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளார். படமும் ஓரளவுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றது எனலாம்.

டிக் டிக் டிக் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி சுந்தர்.சி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.ஆனால்,சுந்தர்.சி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்க தாமதம் ஆனதால், ஜெயம் ரவி அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் அடங்க மறு என்ற படத்தில் நடித்துள்ளாராம். படத்தின் தலைப்புக்கு ஏற்ப இந்த படத்தில் ஜெயம் ரவி சமூகத்தில் நடக்கும் அநியாங்களை தட்டி கேக்கும் போலீசா நடித்துள்ளாராம். படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ராஷிக் கண்ணா நடித்துள்ளார். மேலும் படத்தின் இசை அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாகும் என ரவி தன்னுடைய டுவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

You may also like...