Jarugandi Review – Jai, Robo Shankar and Daniel

wait loading cinibook video

நடிகர் ஜெய் பிச்சுமணி இயக்கத்தில் நடித்து வெளிவந்த படம் தான் ஜருகண்டி. இந்த படத்தில் ஜெய், ரோபோ சங்கர் மற்றும் பிக்பாஸ் டேனியல் நடித்துள்ளனர். பொதுவா ஜெய் திரைப்படம் என்றாலே ஓரளவுக்கு காதல் கதையாக தான். ராஜா ராணி,எங்கேயும் எப்போதும்,திருமணம் என்னும் நிக்கா போன்ற நிறைய படங்கள் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டவை. சரி வாங்க இந்த படம் எப்படி இருக்கு பார்க்கலாம்…..

கதைக்களம்:-

நடிகர் ஜெய் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை சார்ந்தவர். அம்மா தங்கை என சிறிய கும்பம் ஜெய்க்கு. அவர் நண்பர் டேனியல் உடன் இணைந்து சொந்தமாக தொழில் தொடங்கவேண்டும் என்ற ஆசையுடன். சில கோல் மால் செய்து வங்கியிலிருந்து கடன் பெறுகின்றனர்.

Jarugandi Review - Jai, Robo Shankar and Daniel

இதனால் அவர்கள் இருவரும் அடுத்தடுத்து சில பிரச்சனைகளில் மாட்டிக்கொள்கிறார்கள். அவர் தொழிலில் ஏற்பட்ட சிக்கலில் இருந்து மீள்வதற்குள் ஜெய் ஒரு பெண்ணை சந்திக்கிறார். அவருடன் ஏற்படும் காதல்… அந்த காதலால் ஏற்படும் மற்றும் ஒரு பிரச்சனை என தொடர்ந்து சிக்கல் வருகிறது. அது என்ன பிரச்சனை மற்றும் அதிலிருந்து அவர்கள் வெளியே வந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் உட்கரு.

திரைவிமர்சனம்:-

நடிகர் ஜெய்யின் நடிப்பு இந்த படத்தில் அந்தஅளவுக்கு எடுபடவில்லை என்றே சொல்லலாம். அவருக்கு பொதுவாக காதல் காட்சிகள் தான் நன்றாக வரும். அப்படி இருக்கையில் இந்த படத்தில் காதலுக்கு முக்கியத்துவம் சரியாக கொடுக்கவில்லை. அதனாலேயே அவரின் நடிப்பு இந்த படத்தில் எடுபடவில்லை. மொத்தத்தில் ஜெய்க்கு ஏற்ற படமா என்றால் கிடையாது என்றே சொல்லலாம். அடுத்து ரோபோ சங்கர் காமெடி படத்திற்கு பெரிய பக்கபலமாக அமைந்துஉள்ளது. அந்த அளவுக்கு படத்தை கொஞ்சம் சோர்வு இல்லாமல் கொண்டுசேர்த்துள்ளார்.
படத்தில் புதுமுக நடிகை நடித்துள்ளார். அவர் நடிப்பு சுமார் தான். இசை நன்று. பாடல்கள் அந்த அளவுக்கு சொல்லும்படி இல்லை என்றாலும் படத்தில் BGM நன்றாக அமைத்துள்ளார் இசைஅமையாப்பளார்.
மொத்தத்தில் படம் சுமார் தான். கதை ஓகே தான் .ஆனால், இயக்குனர் அதை சொல்ல வந்த விதம் சரியாக இல்லை என்பது தான் உண்மை.

Leave a comment

You may also like...