
Japanese Ambassador danced to Kavala song from jailer movie
ஜெயிலர் படத்தின் காவலா பாடலுக்கு நடனம் ஆடிய ஜப்பான் தூதர்-இணையத்தில் வைரல்…!!!
Japanese Ambassador danced to Kavala song from jailer movie- viral on the internet…!!
ஜெயிலர் படத்தின் காவலா பாடல் மிகவும் பிரபலமாகி விட்டது. காவலா பாடலுக்கு அனைவரும் நடனம் ஆடி இணையத்தில் பகிர்ந்து வரும் நிலையில், இப்பாடலுக்கு ஜப்பான் நாட்டில் உள்ள இந்திய ஜப்பான் தூதர் நடனம் ஆடி இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தான் ரொம்ப வேகமாக வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் சன் pictures தயாரிப்பில் வெளிவந்த படம் தான் ஜெயிலர். இப்படம் வெளிவந்து ஒரே வாரத்தில் பல கோடி வசூலை பெற்றுள்ளது எனலாம். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் பான் இந்தியா படமாக பேசப்படுகிறது. இப்படம் வெளிவருவதற்கு முன்பே, இப்படத்தின் காவலா பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்பெற்றது எனலாம். அனிரூத் இசையில் காவலா பாடல் மக்கள் மனதில் இடம் பெற்றது. இப்பாடலில் தமன்னா அவரின் டான்ஸ் மற்றும் அனிரூத் இசை தெறிக்க விடும் அளவுக்கு இருக்கும். இப்பாடல் வெளிவந்த நாளிலிருந்த பலரும் இப்பாடலுக்கு நடனமாடி ரீலிஸ் போட்டு வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய நாட்டின் ஜப்பான் தூதர் “ஹிரோஷி சுஸுகி” அவர்கள் காவலா பாடலுக்கு நடனமாடி தன்னுடைய டிவீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரஜினி மீதான அன்பு தொடர்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது ஹிரோஷி சுஸுகி அவர்கள் வெளியிட்ட காவலா வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/HiroSuzukiAmbJP/status/1691731446917214612?s=20